பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. பாவேந்தரின் பீடு: உயர் அலுவல்களில் இருப்பாரிடம் யாதானும் ஒரு நலம் நாடிக் கூனிக் குறுகிக் குழைந்து பல்லிலளித்து வாழ்வார் ஒருபுறம் கிடப்ப, ஓரளவுக்குத் தன்மதிப்பும் குமுகாய மதிப்பும் உடைய பெரியவர்களும் கூட, அரசியல் உயர் அலுவலாளரிடம் நலம் நாடிச் சென்ருல், பணிவோடும் குழைவோடும் தம் வேண்டுகோளைத் தெரிவித்தல் உண்டு. ஆளுல் நம் பாவேந்தரோ, யார்க்கும் எதற்கும், எச்சூழலிலும் பணியாத பெருமிதம் உடையவர். தம்மை நாடிவரும் யாவருக்கும் தம்மால் இயன்ற உதவியைச் செய்யும் இளகிய மனமுடைய அவர், சில வேளைகளில் அவர்பொருட்டு, புதுவையில் தலைமை அமைச்சராகவிருந்த திரு. குபேர் அவர்களிடம் கூடச் சென்றதுண்டாம். அக்கால் குபேர் அவர்களைக் கண்டவுடன், தமக்கே உரிய மிடுக்கான குரலில், "இதோ பார், குபேர், இந்தப் பையனை அழைத்து வந்திருக் கிறேன். அவனுக்கு ஏதாவது வேலை கொடு.” என்று நிமிர்ந்த பார்வையுடன் கூறுவாராம். என்னே பாவலர் தம் பீடு - - - {5ఏlu్క, జి; ఫ్ట&ు. 4}