பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. உப்புமா ஆராய்ச்சி ஒரு நாள் பாவேந்தரின் மகன் எங்கிருந்தோ பாக்குத் து.ாளில் கலக்கும் மனச்சாறு (essence) கொஞ்சம் ஒரு கண்ணுடிக் குப்பியில் கொண்டுவந்து சுவர்ப்பேழையில் வைத் திருந்தார். அதைப் பாவலர் பார்த்து விட்டார். அடிக்கடி அதை எடுத்தெடுத்து மோந்து பார்ப்பதும் பிறகு இருந்த இடத்திலேயே வைத்து விடுவதுமாக இருந்தார். அவர் மகன் இதை ஒரு நாள் கண்டுவிட்டார். உடனே பாவலர், “என்ன இது?’ என்று கேட்டார். அவர் பாக்குத் தூளில் கலக்கும் மணச்சாறு’ என்ருர். பாவலர் தலையை ஆட்டியபடி ஆழ்ந்து எண்ணியவாறே போய்விட்டார். - பாவேந்தர் மூகள சுறுசுறுப்புடையதும், உள்ளம் புரட்சி உணர்வு பெற்றதும் ஆகையால், அந்த மணச்சாற்றை எந்த எந்த வகையில் பயன்படுத்தலாம் என்று ஆராயத் தொடங்கியது. திடுமென ஒருநாள் காலையில் பழநியம்மா” வுக்கு அழைப்பு வந்தது. அம்மையார் வழக்கம் போல அவர் குழந்தை விருப்பத்தைக் கேட்கப் போனர். "நம்ம வீட்டில் குறுநொய்(ரவை) இருக்கா?" என்று கேட்டார் பாவலர். 'இல்லை; என்ன வேணும்?' என்ருர் அம்மையார். போய் வாங்கி வரச்சொல் என்று கட்டளையிட்டு விட்டார் பரவலர். அவர் விருப்பப்படி நொய், முந்திரிப்பருப்பு, சருக்கரை, முதலிய எல்லாப் பொருள்களும் அவர் முன்னிலையில். வைக்கப்பெற்றன. 'என்ன வேணும்’னு நானே செய்து தருவேனே' என்ருர் அம்மையார் ஒன்றும் புரியாதவராய், அதெல்லாம் உனக்குத் தெரியாது. வாணலியை அடுப்பில் வை; குறுநொய்யை வறு, நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்தெடு; அப்புறம் அப்புறம் என்ன செய்வையோ?. தெரியாது. எனக்கு. அந்த இது. அதாவது உப்புமா போல இனிப்பு, நெய் போட்டுக்கிண்டி வைப்பாயே.. அது வேணும்' என்று குழந்தை போல மெல்லத் தம் ஆவலை வெளியிட்டார். அம்மையார் புரிந்து கொண்டு சிரித்தார்கள், சிறிது நேரத்தில் அவர் விரும்பிய பண்டம் செய்யப்பட்டது.