பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~ 1.92 – பாவலர் மிக உன்னிப்பாக அடுப்பருகிலேயே நின்றுகொண் டிருந்தார். வாணலியை அடுப்பிலிருந்து அம்மையார் இறக்கும் பொழுது, இரு இரு என்று நிறுத்திவிட்டு 'டேய் தம்பி, அந்த இதைக் கொண்டு வா!” என்று கட்டளே யிட்டார். தம்பி (அதாவது மகன்) ஒன்றும் புரியாது விழித் தார். பாவலர்” அதான். அந்த மணச்சாறு. அத்ை எடுத்துக்கொண்டு வா, என்று விளக்கினர். மகன் புரிந்து கொண்டு தயங்கியவாறு, அப்...பா ..! அது பா...க்.கு” என்று கூறுவதற்குள் "எல்லாம் எனக்குத் தெரியும்; போய்க் கொண்டு வா...' என்ருர். பாவேந்தர். மகன் கொண்டு வந்து கொடுத்துவிட்டு நடப்பதை வேடிக்கை பார்த்தார். பாவேந்தர் குப்பியிலிருந்த மணச்சாறு முழுவதையும் வாணலியில் கொட்டி, அங்காந்து நின்ற அம்மையாரை, , உம். இப்பொழுது கிளறு...” என்று ஊக்கப்படுத்தினர். எல்லா வேலையும் முடித்தது. பாவேந்தரைச் சுற்றி வளைத்து எல்லாப் பிள்ளைகளும் உட்கார்ந்தனர். பாவேந்தரே சிறு கரண்டியில் பண்டத்தை எடுத்து எல்லாருடைய இலைகளிலும் சிறிது சிறிது வைத்துத் தாமும் சிறிது வைத்துக்கொண்டார். 'உம். நல்லாயிருக்கும் ... தின்னுங்கோ' என்று ஆணை யிட்டார். பிள்ளைகள் தயங்கின. பாவலரோ இரண்டு. மூன்று வாய் எடுத்துப் போட்டு, 'மிக நல்லாயிருக்கே ...” என்று கூறிவிட்டு, மேலும் எடுத்து உண்ணத் தொடங்கினர். அவர் முகம் மாறிவிட்டது. தொண்டை கரகரத்தது. தாம் செய்த பிழையை உணர்ந்து, நீங்கல்லாம் சாப்பிடுங்கோ; நான் ஆறினப்புறம் சாப்பிடுகிறேன். அப்பத்தான் நல்லா ருக்கும் என்று கூறி எடுத்துக்கொண்டு அவர் அறைக்குப் போளுர், மகன் பின்னலேயே போளுர். பாவலர், 'நன்ருய்த் தான் இருந்திருக்கும். ஆளு. இது பழசுபோல இருக்கு..." என்று அழாக்குறையாகக் கூறிஞர். பிறகு ஒரு வானவி பண்டமும் வீணில் கீழே கொட்டப்பட்டது. |சுவடி 2. ஒலை 4. பக் 65 தொடர்ச்சி 68)