பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. நினைவாக வைத்துக் கொள்ளுவேன்! 1955 என்று நினைக்கின்றேன்: அந்த ஆண்டு வந்த பொங்கல் நாளில் என் பெரிய மகள் பொற்கொடியுடன் நான் பாவேந்தரைப் பார்க்கச் சென்றேன். கையில் சில வகைப் பழங்களும் ஒரு (Swan) தூவலும் அவருக்கு அன் பளிப்பாகக் கொண்டு சென்றிருந்தேன். பழங்களையும் அந்தத் தூவலையும் ஒரு தட்டில் வைத்து என் குழந்தையின் கைகளால் அவ்ற்றை அவரிடம் கொடுத்து, "ஐயா, இந்தத் துரவலை என்றென்றைக்கும் என்னுடைய நினைவாக நீங்களே. வைத்துக் கொள்ள வேண்டும். எவருக்கும் கொடுக்கக் கூடாது’ என்று வேண்டிக் கொண்டேன். அதற்கு அவர் ஊகும்... நான் யாருக்கும் தரவே மாட்டேன்... உன் நினைவாகவே வைத்துக்கொள்ளுவேன்...” என்று கூறினர், அதன்பின் ஒரிரு கிழமைகள் கழித்து அவரிடம் அந்தத் தூவல் இல்லாததைக் கண்டு, 'ஐயா, அந்தத் தூவல் எங்கே?' என்று கேட்டேன். அதற்குப் பாவேந்தர் தமக்கே யுரிய குழைவுடன், அதை எவனே வாங்கிக் கொண்டு போனன் பா; எவன் வாங்கிப் போனன் என்பதே நினைவில் இல்லை... என்ன செய்ய ..” என்று குழந்தை போல விடை சொன்னர். பொருள்களில் என்றுமே அவர் நாட்டம் வைத்ததில்லை, என்பதற்கு இஃதோர் எடுத்துக்காட்டு: |சுவடி 4: ஒலே 4: பக் 131