உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. உங்கள் அப்பனையுந்தான்! ஒருமுறை பெங்களூரில் திருக்குறள் கூட்டம் ஒன்றில் பாவேந்தர் பேசிக்கொண்டிருந்தார்: அக்கூட்டத்திற்குத் திருக்குறள் முனிசாமியும் வந்து மேடையில் பேசுவதற்கென அமர்ந்திருந்தார். பாவேந்தர் தமிழைக் கெடுக்கின்ற வையாபுரி வழிப் பேராசிரியர்கள் ஓரிருவரை மனத்தில் கொண்டு, 'தமிழைப்பற்றி அறியாதவன்களெல்லாரும் - வழக்கறிஞருக்கும் அதுக்கும் இதுக்கும் படித்துவிட்டு - எல்லாந்தெரிந்தவன்கள் போல் தமிழ்த்துறைக்கு வந்து அதைக் கெடுத்துக்கொண்டு வருவதுமல்லாமல் திருக் குறளுக்கு வேறு உரை கிரை எழுத வந்து விடருன்கள்...” என்று மீறிய உணர்வில் உரக்கப் பேசிக்கொண்டிருந்தார்: மேடையில் உட்கார்ந்திருந்த திருக்குறளார் (அவரும் வழக்கறிஞர்க்குப் படித்தவர்) அமைதியாக இருக்க மாட்டாமல், பாவேந்தர் தம் பக்கம் திரும்புகையில், "ஐயா... என்னையுமா சொல்கிறீங்க?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டார். உடனே பாவேந்தர் உங்களை மட்டுமென்ன? உங்கள் அப்பனையுந்தான் சொல்கிறேன்; உங்களுக்கு மட்டும் என்ன தெரியும் திருக்குறளார் என்று பெயர் வைத்துக்கொண்டிருக்கின்றீர்களே! எங்கே, எத்தனைத் திருக்குறளுக்குச் சரியான உரை தெரியும்? வாருங்கள் பார்க்கலாம்!” என்று பேச்சோடு பேச்சாகக் கூறிஞர். கூட்டத்தில் கொல் என்று நகை எழுந்த்து. இதைப் பிற்கால் பாவேந்தரே என்னிடம் நேரிடையாகச் சொல்லி "இவர் அப்பொழுது பேசாமல் அல்லவோ இருந்திருக்க வேண்டும்" என்று பெருத்த சிரிப்புக்கிடையில் கூறினர்: . (சுவடி 4. ஓலே 4. பக் 231