பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. மருந்துவரும் பாவேந்தரும் பாவேந்தர் பாரதிதாசன் ஒருமுறை நோயுற்று உடல் நலிவாக இருந்தார்: அவர் பால் அன்பும் பரிவும் கொண்ட மருத்துவர் ஒருவர் அவர் உடலை மிகவும் கவனமாகப் பார்த்து வந்தார். நோய்க்கிடையிலும் பாவேந்தர் அடிக்கடி பாடல்களை எழுதிக் கொண்டும் வந்து போகின்ற அன்பர் களிடம் ஈடுபட்டுக்கொண்டும், இருந்தார். அப்பொழு தெல்லாம் அடிக்கடி வெண்சுருட்டுப் புகைத்துக் கொண் டிருப்பார் பாவேந்தர் இதைக் கூர்ந்து கவனித்த மருத்துவர் அவரிடம் மிகவும் அன்பாக, புகை பிடிப்பதை நிறுத்தி விடுங்கள்; உங்கள் உடல் மிகவும் நலிவுற்றிருக்கின்றது” என்ருர், அதற்கவர் தமக்கே உள்ள பெருமிதத்துடனும் நகைச்சுவையடனும் 'உம் இதைத் தவிர வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்; அதுதான் எழுதுகிறது..." என்று தம் கையிலுள்ள வெண்சுருட்டைச் சுட்டிக் காட்டிய படியே சொன்னர்: மருத்துவர் வியந்து போனர். இதைத் திருக் குறள் பெருமாள் சொன்னர். |சுவடி 4. ஒலை: 4: பக்-121