பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. ஓ, எடுத்துக்கலாமே! பெருஞ்சித்திரளுர் புதுவையில் அஞ்சல் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது, நாள்தோறும் பாவேந்தர் வீட்டுக்குப் போய் வந்து கொண்டிருப்பார். ஒருமுறை, பாவேந்தரிடம் பெருஞ்சித்திரளுர் பேசிக் கொண்டிருக்கையில், 'ஐயா, நாம் இரண்டு பேரும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று விரும்புகிறேன் என்று அவருடைய இசைவைக் கேட்டிருக்கிருர். அதற்கு உடனே, "ஓ! அதுக்கென்ன? எடுத்துக்கலாமே!” என்று பாவேந்தர் இசைந்திருக்கிரு.ர். - - ஆனல், அப்படிப் புகைப்படம் எடுக்க முயன்ற ஒரீரண்டு முறையும் ஏதோ ஒருவகையில் அம்முயற்சி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. . بهبه இறுதிவரை அந்தப் புகைப்படத்தை இருவரும் எடுத்துக் கொள்ளவே இல்லை. இதுபற்றிப் பெருஞ்சித்திரனர் அவர் மறைவுக்குப் பின் பலமுறை கூறி வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிருர்,