பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. ஒழுங்கில்லாதவனிடம் 3.T ಕ161 டா ஒழுங்கு? பாவேந்தரும் அவருடைய மருமகனும் திருச்சிக்குப் புகைவண்டியில் போய்க்கொண்டிருத்தனர். இவர்கள் ஏறிய பெட்டியில் முதல் வகுப்பில் இரண்டு மெத்தைகளே எதி ரெதிராக இருந்தன: ஒன்றில் பாவேந்தர் அமர்ந்து கொண் டார், எதிரில் இருந்ததில் ஒருவர் கால்களை நீட்டியவாறு படுத்துத் துரங்கிக் கொண்டிருந்தார். மருகர் அதில் உட்கார இடமின்றி நின்றுகொண்டிருந்தார். படுத்திருந்தவர் சிறிது விழித்துப் பார்த்துவிட்டு மேலும் கண்களே மூடித் தூங்கு பவர் போல் இருந்தார். உடனே மருகர், படுத்திருப்பவரிடம், 'ஐயா, எழுந்திருங்கள்; நானும் அமரவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்: அவர் பேசாமலேயே கிடந்தார்: மீண்டும் மருகர், "என்னய்யா, நான் நிற்கிறேன்; நீ துரங்கு கிருயே!" என்று ஒருமையில் பேசினர். துரங்குபவருக்குச் சினம் வந்து விட்டது. உடனே படுத்தபடியே கண்களை விழித்து, “ஒழுங்காகப் பேசு ஐயா....” என்று சிறிது உரத்த குரலில் எச்சரித்தார். இவர்களின் போராட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பாவேந்தர் உடனே மிகுந்த சினத் துடன், ஒழுங்கில்லாதவனிடம் என்னடா ஒழுங்கு வேண்டிக்கிடக்கு... அவன் எவ்வளவு நேரமா நின்னுகிட் டிருக்கான்! நீ படுத்துகிட்டே எழாம கிடக்கிறே; எழுடா” என்று சீறினர்; படுத்திருந்தவரும் எழுந்து கூச்சலிட்டார்: சண்டை வலுத்தது. இதற்குள் வண்டி ஒரு நிலையத்தில் வந்து நின்றது: இவர்கள் சண்டையைப் பார்த்த மாணவர் கள் சிலர் அந்த ஆளிடம் தனியாய், 'ஐயா, அவர் பாரதி தாசன் அவரை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் அப்படித்தான் கண்டிப்பானவர்' என்று அமைதிப் படுத்தினர்கள். பாவேந்தரிடம் சண்டை செய்தவர் விடு முறையில் வீடு சென்றுகொண்டிருந்த தொடர்வண்டித்துறை அதிகாரி ஒருவர்தாம்: - . . . . - |சுவடி 4: ஒலை 4. பக். 56)