பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. உடம்பெல்லாம் ஊருது; வந்து பிடி பாவேந்தருக்குப் புலால் உணவு என்ருல் மிக விருப்பம். அதிலும் மீன், கோழி, புரு என்ருல் மிகவும் விரும்பி உண்பார். மின் வகையிலும் இருல் மீன் என்ருல் அவருக்கு உயிர். நாளும் ஏதோ ஒரு வகையான அசைவ உணவு அவருக்கு இருக்க வேண்டும். ஒவ்வொரு நாள் காலையிலும் சிற்றுண்டிக்குப் பின், புதுச்சேரி, பெருமாள் கோவில் தெருவிலுள்ள அவர் வீட்டுத் திண்ணையில் அவரைப் பார்க்கலாம். சில வேளைகளில் முற்றத்தில் போட்டிருக்கும் அகலமான சாய்மனை கொண்ட விசி (Bench)யில் அமர்ந்து கொண்டிருப்பார். அவ்வாறு அமர்ந்து கொண்டிருக்கையில் கம்மா இருக்க மாட்டார். தெருவில் போவோர் வருவோர்களேயெல்லாம் கூப்பிட்டுக் கூப்பிட்டு ஏதாவது பேச்சுக் கொடுத்துக் கொண்டிருப்பார். போகிறவர்களில் பெரும்பாலானவர் அவருக்குத் தெரிந்தவர் களாகவே இருப்பர். அண்டை அயலில் உள்ள தெரிந்த வீட்டுப் பெண்கள் காலையில் காய்கறிக் கடைக்குப் போய் வருபவர்களாக இருந்தால், அவர்களைக் கூப்பிட்டு அன்றைக்கு என்ன காய்கறி அல்லது மீன் வகைகள் கடைக்கு வந்திருக்கின்றன அல்லது மலிவாக விற்கின்றன என்பன பற்றியெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்வார். தமக்கு விருப்பமான கறிவகைகள் ம்லிந்து கிடக்கின்றன என்று தெரிந்தால், உடனே வீட்டிற்குள்ளே உள்ள தம் துணைவி யாருக்குச் செய்தி சொல்லி, அவற்றை வாங்கிவர ஏற்பாடு செய்யச் சொல்வார். - சில பொழுதுகளில் அவருக்கு மிகவும் விருப்பமான இருல் மீன் கடைகளுக்கு வந்திருப்பதாகச் செய்தி கிடைக்கும். உடனே வீட்டிற்குள் ஓடி, பழனியம்மா, இன்னைக்கு நிறைய இருல் வந்திருக்காம்; பெரிசு பெரிசா இருக்காம். எதிர் வீட்டு அம்மா வாங்கிகிட்டுப் போரு!