பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 199 — உடனே நீயும் ஆளை அனுப்பு என்பார். அன்றைக்குப் பகல் உணவில் அல்லது இரவு உணவில் இருல் சிறப்பு உணவாக இருக்கும். அதனை மிகவும் சுவைத்து உண்டார். ஆனால், இருல் மீன் கொஞ்சம் வளிப் பொருள். அஃதாவது காற்று(வாயு)ப் பொருள். எனவே உண்டால் இரவில் உடம்புத் தசைகளில் கொஞ்சம் வலியிருக்கும் இருல் மீன் உண்பவர்களுக்கு அது தெரியும். இருந்தாலும் அதன் சுவை சுருதி மீன் உண்ணும் எல்லாருமே அதை விருப்பமாக உண்பர். ஆனல் அளவாக உண்ணுவார்கள். பாவேந்தர்க்கு அது மிகவும் விருப்பமான உணவாகையால், அதனை அளவு கடந்தே உண்டு விடுவார். அப்படிப்பட்ட நாள்களில், இரவில் பாவேந்தருக்குத் தூக்கம் வராது. உடம்புத் தசைகளில் கொஞ்சம் வலி ஏற்பட்டுப் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருப்பார். அவ்வாறிருக்கும் சில இரவு வேளைகளில் பழனியம்மாளுக்கு அழைப்பு வரும். அம்மையார் அவர் அறைக்குச் சென்று என்ன வென்று கேட்பார். பழனியம்மா, இருல் மீன் உடம் பெல்லாம் ஊருது, லந்து பிடி என்று நகைச் சுவையாச, உடம்பைக் கொஞ்சம் பிடித்து விடும்படி கூறுவார். அப்படிப் பட்ட நேரங்களில் அவரின் ஒவ்வொரு செயலும் ஒரு குழந்தையுடையது போல் இருக்கும்! .’