பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. பாவேந்தர் துணிவு பாவேந்தருக்கு இயல்பாகவே பழம் புலவர்களுக்கு இருந்த புலமைத்துணிவு சிறிது கூடுதலாகவே இருந்தது. இடம், பொருள், ஆள் என்று எதனையும் பாராமல், தாம் நினைத்ததை எவ்விடத்தும் எவர் முன்னும் கூறும் உள்ளத்தின் மதுகையை வேறு எவரிடத்திலும் பார்ப்பது அரிது. மொழி ஞாயிறு பாவாணரும் இந்த வகையில் துணிவானரே என்ரு லும், சிலர் முன்னும், சில இடங்களிலும் பண்பு கருதியும் அவ்வள்வு துணிவுடன் பேச மாட்டார். ஆளுல் எழுத்துகளில் அந்தத் துணிவு அளவுக்கு மீறியே இருக்கும். பாவேந்தரோ பேச்சிலும் எழுத்திலும் துணிவு மிக்கவராகவே இருந்தார். ஒருமுறை பாவேந்தர் தலைமையில் பாவாணர் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருந்தார். பாவாணரின் உரை ஆராய்ச்சி மிக்கதாக இருக்குமாகை யால், கூட்டத்தில் பெரும் பாலார்க்கு அது கொஞ்சம் கவர்ச்சி குறைந்ததாகப் படும். அந்த நேரங்களிலெல்லாம் கூட்டத்தில் கொஞ்சம் சலசலப்பு ஏற்படும். ஆனல், பாவாணர் அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் தாம் சொல்ல வந்ததைச் சொல்லிக் கொண்டிருப்பார். அன்றைக் கும் அப்படித்தான் நிகழ்ந்தது. ஆனல் பாவாணர் பேச்சு நீண்டு கொண்டே போனது. q இந்தச் சமையத்தில் வேறு யாராக இருந்தாலும் பாவாணரை இடைமறிக்கும் ஆற்றல் ஏற்படாது. ஆனல் பாவேந்தர் சிறிது நேரம் பொறுத்திருந்து பார்த்து விட்டு, இன்னும் காலத் தாழ்த்தினுல் கூட்டத்தின் சலசலப்புக் கூடி விடும் என்று தெரிந்து கொண்டு, பாவாணரிடம், ஊம், ஊம், எவ்வளவு நேரம் பேசுவது; உட்காருங்கள்” என்று கூறி, அவர் பேச்சை உடனே முடித்துக் கொள்ளும் படி சொன்னர். பாவாணரும் அவர் கூறியவறே உடனே சடக்கென்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு அமர்ந்து கொண்டார். கூட்டத்தினர் பாவேந்தரின் துணிவை அன்று நேரிலேயே காண வேண்டியதாகப் போய் விட்டது.