பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 இப்பொழுது என் மாணவர்! பாவேந்தர் பாரதிதாசனர் அவர்களின் திருமகன் மன் னர் மன்னன் -சாவித்திரி திருமணம் புதுச்சேரியில் 1955ஆம் ஆண்டு நடை பெற்றது. அத்திருமணத்திற்குப் பாவா ணர்,தமிழ்மறவர் புலவர். வை. பொன்னம்பலஞர் ஆகியோர் வந்திருந்தனர் புலவர், பொன்னம்பலஞர் அவர்களும். பாவாணர், அவர்களும் எனக்கு முறையே உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும் ஆசிரியர்களாக இருந்தவர்கள், திருமணம் முடிந்து அனைவரும் ஒன்ருகத் திருமணப் பந்தலின் ஒரு மூலையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்; அப்பொழுது பாவேந்தரும் வந்து எங்களுடன் வந்து அமர்ந்து பேச்சில் கலந்து கொண்டார். பேச்சுக்கிடையில், புலவர் பொன்னம் பலஞர் பாவேந் தரிடம் என்னைக் காட்டி, இவர் (பெருஞ்சித்திரனt) உயர் நிலைப் பள்ளியில் என்னுடைய மாணவராக இருந்தவர், -என்று பெருமையாகக் கூறினர். அதைக்கேட்ட, பாவாணர், அப்படியா, ஆனால், கல்லூரியில் அவர் என்னுடைய மாண வர் என்ருர். இன்னும் சற்று அழுத்தமாக, இவற்றைக் கேட்ட பாவேந்தர் வெடுக்கென்று, அது அப்பொழுது, இப்பொழுது இவர் என் மாணவர் என்றர். அதைக்கேட்ட மூவருமே பெருமிதமாகச் சிரித்துக் கொண்டனர். அப் பொழுது அம்மூவரை விடவும் எனக்கு மிகவும் பெருமித மாக இருந்தது. -