உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. ஒடிப்போய் எடுத்துக் கொண்டு வா! மாலை நேரங்களில் பாவேந்தர் சிலபொழுது அவருக்குச் சொந்தமாயிருந்த பழனியம்மா அச்சகத்திற்கு வந்து, முற்றத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பார். ஒருநாள் அப்படி அவர் அமர்ந்திருந்த பொழுது மழை பெய்து கொண்டிருந்தது. அக்கால் ஒருவர் மழையில் ஒதுங்கி ஒதுங்கி அச்சகத்திற்குள் வந்து, உள்ளேயிருந்த பாவேந்தரின் மருமகளுர் திரு. தண்டபர்ணி அவர்களிடம் ஏதோ கேட்டு விட்டு மீண்டும் வெளியே போளுர். அவர் போனபின், பாவேந்தர் தம் மருமகனை அழைத்து அவர் என்ன சேட்டுவிட்டுப் போகிருர்’ என்று வின் விஞர். அதற்கு அவர் மருமகனுர், அவர் இன்றைய விடு தலை இதழ் கேட்டார்; நான் இங்கில்லை; வீட்டிலிருக்கிறது; பிறகு அங்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று ச்ொன் னேன்’ என்று கூறினர். உடனே பாவேந்தர் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது; அவர் எவ்வளவு ஆர்வமாக மழையில் நனைந்து கொண்டுவந்து கேட்கிருர் அவரை உடனே ஒடிப்போய்க் கூப்பிடு என்று சொன்னர். அவரும். சிறிது தொலைவு போய் விட்ட அவரை ஒடிப்போய் அழைத்து வந்தார். அவர் வந்தபின், நீங்கள் கொஞ்சம் இருங்கள். நான் போய் எடுத்துக் கொண்டு வரச் சொல்கிறேன்’ என்று கூறி விட்டு, மருமகனிடம், நீ வீட்டுக்கு ஒடிப்போய் விடுதல்’ யை எடுத்துக் கொண்டு வா’ என்று கட்டளையிட்டார். திரு தண்டபாணியும் அப்படியே வீட்டுக்குப் போய்" சிறிது நேரம் கழித்து வந்து "விடுதலை இதழை யாரோ படிக்க வாங்கிப் போயிருக்கிருர்களாம்" என்ருர். அதைக் கேட்ட பாவேந்தரும் வந்தவரிடம் வருத்தமாக, "என்ன செய்வது? பிறகுதான் வந்து படித்துக் கொள்ளுங்கள்' என்று சொல்வி அந்த அன்பரை வழியனுப்பிவைத்தார். பிறர் செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் அவ்வளவு ஆர்வம் பாவேந்தர்க்கு: