உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 3 — “கப்போல்வளை’ என்ற ஒளவையாரின் ஆத்திசூடி அடிக்கு விளக்கம் சொல்லும்படி கேட்கப்பட்டது. அத்தனை மாணவர் களிலும், நம் சுப்புரத்தினமே அவ்வடிக்குச் சரியான பொருள் கூறினராம். அப்பொழுது இவர்க்கு அகவை ஏழு இதனல் புலவர் பங்காரு இவர்பால் பேரன்பு கொண்டு இவர்க்குத் தமிழ் இலக்கிய இலக்கணங்களையும் நிகண்டு வரிசைகளையும் ஒழுங்காகப் பாடம் சொல்லிவந்தார். இதன் காரணமாக, சுப்புரத்தினம் 1908-இல் கல்வே கல்லூரியில் நடந்த புலவர் வகுப்பில் கல்லூரியிலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்ருர். அவரின் தமிழறிவும், கல்விமேல் தனியா நாட்ட மும் கண்ட அரசினர் மறு ஆண்டிலேயே அவருக்குத் தமிழாசி ரியர் வேலைகொடுத்துக் காரைக்காலைச் சேர்ந்த நிரவியில் பணியாற்றச் செய்தனர். அக்கால் அவர்க்கு மாத ஊதிய மாகக் கிடைத்துவந்த தொகை முப்பது உருபாக்களே! அரசினர் பள்ளித் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்தா லும், சுப்புரத்தினத்திற்குத் தமிழ்க்கல்விமேல் தணியா வேட்கையிருந்தது. சிறுசிறு அழகிய தமிழ்ப் பாடல்களை எழுதிவந்தார். அவர் உள்ளமும் அறிவும் கிளர்ச்சி பெற்று எழுந்தன: பேருடனும் புகழுடனும் உரிமையுடனும் வாழ்ந்த கழகக் காலத் தமிழ் மக்களே நினைந்து ம ன ம் உருகினர். இற்றைக் காலத்தில் தமிழ் மக்கள் அடிமையாகவும், மொழி யுணர்வும், உரிமையுணர்வும் அற்ற பேதைகளாகவும் வாழ் வதைக் கண்டு உள்ளம் கசிந்தார். பிரஞ்சுப் பகு தி யில் இருந்த தமிழ் மாநிலம் பிரஞ்சுக்காரரிடமும் பிற பகுதிகள் ஆங்கிலேயரிடமும் இருந்தமை கண்டு நெஞ்சு நைந்தார். அத்தகைய அடிமை வாழ்வில் தமிழ் மக்கள் உரிமையற்றுத் துயருறுவதைக் கண்டார். அவர்களின் உள்ளம் விடுதலையைப் பற்றிய நினைவே இன்றி ஆராத்துயிலில் அமிழ்ந்து கிடந்தது பழய நைந்த தமிழரொடு நானிருந்தேனே' என்று பாவலர் மனம் கசிந்தார். அக்கால் ஆங்கிலேயரின். அடக்குமுறை தாளாது, பாவலர் சுப்பிரமணிய பாரதியார்