உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- 4 - புதுச்சேரியில் வாழ்ந்துவந்தார். பாரதியார் ஒர் உணர்வுப் பாவலர். இந்திய நாட்டு உரிமைக்காகப் பாடுபட்டுவந்த பேராயக்கட்சியின் கொள்கைப்பாவலராக இருந்த பாரதி யார், இந்திய நாட்டு விடுதலைக்கென மக்களைத் தம் பாட்டுத் திறங்கொண்டு விழித்தெழச் செய்தார். புதுவையில் அவர் தங்கியிருந்த நாட்களில், சுப்புரத்தினத்திற்கு அவர் வல்லு ணர்வுப் பாடல்களில் ஈடுபாடிருந்தது. புலவர். திரு. பங்காரு, குயில் சிவா முதலியோர் பாரதியாருக்கு நெருங்கியவர்களாக இருந்தமையால் சுப்புரத்தினத்திற்குப் பாரதியாரைக் காண வும், கண்டு தொடர்பு கொள்ளவும் வாய்ப்பேற்பட்டது. ஒருகால் ஒரு திருமண விருந்தில் பாரதியாரின் நாட்டுப் பாடல் ஒன்றினைச் சுப்புரத்தினம் பாடிக் கொண்டிருந்தார். அதை இவர் அறியாதவாறு நின்று கேட்ட பாரதியார், தாமெழுதிய பாடலைச், சொல்லும் வண்ணமும் சிதைவுருது பாடிய இவர்தம் பாட்டுணர்வைக் கண்டு வியந்தார், அப் பொழுதிலிருந்து இவர்பால் பாரதியாருக்குப் ப ற் று ம் தொடர்பும் ஏற்பட்டது. பாரதியாரின் நாட்டுணர்வும், விடுதலை வேட்கையும், பாட்டுத்திறனும் சுப்புரத்தினத்தை வெகுவாக ஆட்கொண்டிருக்க வேண்டும்: பிறிதொருகால் பாரதியாரின் விருப்பத்திற்கிணங்கவும், பிற நண்பர்களின் இடையிலும் சுப்புரத்தினம் எங்கெங்குக் காணினும் சக்தி யடா’-எனத் தொடங்கும் பாடலைப் பாடிக்காட்டினர். இவர் பால் இயற்கையான பாவன்மையும்,நாவன்மையும் இருப்பதை அறிந்து கொண்ட பாரதியார், இவரைத் தம் அன்பர்களுடன் ஒருவராகச் சேர்த்துக் கொண்டார். இவரெழுதிய எங்கெங் குக் காணினும் சக்தியடா’ என்ற பாட்டு, பாரதியாராலேயே சுதேசமித்திரன் செய்தித்தாளுக்கு விடுக்கப்பெற்று வெளி வந்தது. பாரதியார்மேல் வைத்த அன்பாலும் அவர்தம் பாடல்களின்மேல் கொண்டி நாட்டத்தாலும் சுப்புரத்தினம் தம்மைப் பாரதிதாசன் என்றே கூறிக்கொள்ள விரும்பினர். பாரதியாரின் உள்ளம் இந்திய் நாட்டு விடுதலையை எதிர்