பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

سے 5 ستہ நோக்கிப் பாடியபொழுது, பாரதிதாசன் தமிழ் நாட்டு விடுதலைக்கென குரல் கொடுத்தார். தமிழ் மக்களின் ஆருத் துயரும் அவல நிலையும் பாரதிதாசனின் உள்ளத்தில் ஒரு புத் தெழுச்சியை உண்டாக்கின: - "என்தமிழ் அன்னை துன்பம் நீங்கித் தூய்மை எய்தித் துலங்குதல் காண்பேன், என்தமிழ் நாடு தன்னாட்சி பெற்றுத் துலங்கிடுதல் காண்பேன்; தமிழர் நலங்காண் பேன்தான் நானில மீதிலே’ என்று தம் ஆராவிருப்பத்தை வெளிப்படுத்துகின்ருர் பாரதி தாசன். பொதுநலத் தொண்டுக்காக அவர் உள்ளம் துடி துடித்தது. தமிழ்க்காகவும் தமிழ் மக்கட்காகவும் உழைப் பதே தம் வாழ்வாகும் என்று வரையறுத்துக் கொண்டார். "எனயீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள் தனையீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னல் தினையளவு நலமேனும் கிடைக்கு மென்ருல் செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும்’ என்பது அவர் கூற்று. இத் தமிழ் உணர்வுக் கனல் பாரதி பாரின் பாட்டுணர்வுபோல் பெருக்கெடுத்தாலும், அவர்தம் பாடல்களில் காணப்பெற்ற நாட்டுணர்வினின்று வேறுபட்ட தாகும். பகுத்தறிவு சான்ற தமிழ் மக்கள் அமைப்பைப் பாரதிதாசன் மிகுதியாக விரும்பினர். பாரதியாரின் அடிச் சுவட்டிலேயே தாம்போக விரும்பவில்லை. இவரின் தனியாண் மைக்கு என ஒரு தனிவழி வகுத்துக் கொண்டார். பாரதி யார்க்குத் தமிழ்ப் பற்று இருந்ததே அன்றித் தமிழ்மொழிக் காப்புணர்வு இருந்ததாகத் தெரியவில்லை. அவர் தமிழையும் வடமொழி போலவே கருதி வந்தார். தமிழ் அறநூல்களை யும் ஆரிய மறைநூல்களுக்கொப்பாகவே கொண்டார். பாரதிதாசன், ஆரியத் தொடர்பாலேயே தமிழ் மரபு கெட்ட தென்றும், தமிழும் தன் நிலையில் தாழ்ந்ததென்றும், தமிழ் மக்கள் விடுதலையில்லா அடிமைகளாகப் போயினர் என்றும்