உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

سس- 6 - தெளிவாகக் கூறியள்ளார். அதல்ை பாரதியாரின் உள்ளத் தில் பொங்கி எழுந்த பாவுணர்வு தமிழர் விடுதலை நோக்கிப் புதுவழியில் நடமிடல் ஆயிற்று, அது புரட்சி மனப்பாங்கு வாய்ந்தது! எனவேதான் பாரதிக்கு வாய்க்காத புரட்சிப் பாவலர் என்ற பட்டம் பாரதிதாசனுக்கு மக்களால் கொடுக் கப்பெற்றது! புரட்சிக் கவி’ என்ற பாட்டொன்றை எழுதி யமையால் பாரதிதாசனுக்கு அப்பெயர் கிடைத்தது என்று கூறுவார் கூற்று பொருளற்றது. புரட்சி என்ற சொல் பாரதி தாசனைப் பாரதியாரின் இந்திய நாட்டுணர்வினின்று வேறு பிரித்துக் காட்ட மக்களால் தரப்பெற்ற ஒர் உணர்வு விளக் கச் சொல். இவரின் சொல்வில். செயலில், பாட்டில், வாழ் வில் எல்லாவற்றினும் புரட்சிக் கருத்துகள் நிரம்பித் தமிழர் குமுகாயத்தையே விடுதலே நாட்டம் உடையதாகச் செய்தன. தம்முடைய அரிய தமிழ் நாட்டுத் தொண்டுக்குத் தமிழ் மொழியையே கருவியாக்கிக் கொண்டார் பாரதிதாசன். செந்தமிழ்ச் சொல்லால் செயலால் தடம்பெருந் தோளால் தொடங்குக பணியை’ என்ற வரிகள் பாரதிதாசன் தமிழ்நாட்டுப் பணிக்குத் தம்மை யும் தமிழையும் ஈடுபடுத்திக் கொண்டதைக் காட்டுவனவாம். பாரதிதாசன் தம் பேரன்பாலும், நன்றியுணர்வாலும் பாரதியைப் பாராட்டும் இடங்களிலெல்லாம் தம்முடைய உள்ளுணர்வையும், தமிழ்க்குத்தாம் எந்த வகையில் தொடர்பு கொண்டுள்ளார் என்பதையுமே உணர்த்துகின்ருர். தமிழகம், தமிழுக்குத் தகும்உயர் வளிக்கும் தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில் இலகு பாரதிப் புலவன் தோன்றினன். என்று பாரதிதாசன் குறிப்பிடும் வரிகள், தாம் கொண்ட தமிழக விடுதலை வேட்கையைக் கருத்திற் கொண்டே பாடப் பெற்றதாக நமக்குப் புலப்படுகின்றது. மேலும் அவர் பாரதியாரைக் குறிப்பிடும் பொழுது