உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 7 -- பைந்தமிழ்த் தேர்ப் பாகன்; அவனுெரு செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை! குவிக்கும் கவிதைக் குயில் இந் நாட்டினைக் கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு: தீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா! காடு கமழும் கற்பூரச் சொற்கோ: கற்பனை ஊற்ருகும் கதையின் புதையல்: திறம்பாட வந்த மறவன்; புதிய அறம்பாட வந்த அறிஞன்; நாட்டிற் படரும் சாதிப் படை மருந்து! மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்! அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன் என்று கூறும் வரிகளில் தம்மையே பாரதிதாசன் வெளிப் படுத்திக் காட்டுகின்ருர் எ ன் று கொள்ளலாம். அவரின் உள்ளமே இவ்வடிகளில் நன்கு படம் பிடிக்கப்பட்டிருக் கின்றது. பாரதிதாசன் தமிழ்த் தொடர்பும், விடுதலை வேட் கையும், புரட்சி வேட்கையும் நாளுக்கு நாள் பெருகத் தொட்ங்கின. அவரின் இளமைக் கால நிகழ்ச்சிகள் முற்றும் இவற்றை நினைவு படுத்துவனவாகும். நிரவியிலிருந்த அவர் புதுவைக்கு விரைந்து மாற்றப்பட்டார். இந்நிலையில்தான் பாவலர் பாரதிதாசனுக்குத் திருமணம் நிகழ்வதாயிற்று. 1920-ல் இவர் பெருமாத்துாரில் உள்ள பரதேசி-காமாட்சி என்பார்தம் திருமகள் பழநியம்மாளே மணந்து கொண்டார். திருமணம் தந்தையாரின் விருப்பப் படியே நடந்தது. இவர்தம் துணைவியார் திருவாட்டி பழநி யம்மாள் குடும்ப ஈடுபாடும் பண் பு ம் அன்பும் வாய்ந்து சிறந்து விளங்கினர். பாவலர்தம் குழந்தை உள்ளத்துக் கேற்றபடி அவர் மனம் கோளுதவாறு இனிதே இல்லறம் நடத்தி வந்தார். இவரும் தம் மனைவிமேல் அன்பும் பரிவும் கொண்டு விளங்கினர். சிற்சிலகால் இவர்தம் விடாப்பிடி காரணமாகக் குடும்பத்தாரின் விருப்பங்களும் செயல்களும்