உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

مسد 8 سس، தோல்வியடைவதுண்டு. இவற்றிற்கெல்லாம் அம்மையார் மனம் நோகாது, கணவற்குற்ற தொண்டுகளிலேயே தாம் இன்பம் கண்டுவந்தார். 1921-இல் இவர்களின் இல்லறப் பயனக ஒரு பெண்மகவு பிறந்தது. அதற்கு சரசுவதி' என்று பெயர் சூட்டினர். பாரதிதாசன் தமிழ்ப்பற்று நிரம்பியவராகவும் தமிழ் மொழி வளர்ச்சியில் மிகுந்த நாட்டம் கொண்டவராகவும் விளங்கிலுைம் தனித் தமிழ் இயக்கம் அக்கால் மிகுதியாகப் பரவாத காரணத்தால் தம் பிள்ளைகள் நால்வருக்கும் வட மொழிப் பெயராகவே வைத்திருப்பது குறிக்கத் தக்கது. பின்னர்த் தாம் எழுதிய பாவியங்களிலும், நாடகங்களிலும் வரும் தலைவர் தலைவியர்கட்கெல்லாம், மாவரசு, நாவரசு, வேடப்பர், அழகர், புலித்திறல், வையத்திறல், நல்லமுத்து, நகைமுத்து, மலர்க்குழல், கரும்பு, மின்னெளி, முத்துநகை, பொன்னி, முள்ளி, அழகம்மை, பச்சைக்கிளி முதலிய அழகிய, தூய தனித்தமிழ்ப் பெயர்களாகச் சூட்டி மகிழ்ந்த பாவலர் தம் பிள்ளைகளுக்கு மட்டும் சரசுவதி, கோபதி (இக்கால் மன்னர் மன்னன் என்றும் கூறப்பெறுவர்) வசந்தா, ரமணி என்னும் வடமொழிப் பெயர்களேயே சூட்டியமையாலும், இளமைக் காலத்தே தாம் எழுதிய பாடல்களில் வரைதுறை யின்றி ஏராளமான வடசொற்களைப் புணர்ந்து எழுதியுள்ள மையாலும், பாவலர் பாரதிதாசன் அவர்கள் தொடக்கக் காலத்தே தனித்தமிழ்ப் பற்று நிரம்பியவராக இருந்திலர் என்று கருத வேண்டியுள்ளது. இதற்குக் காரணம் முப்பது நாற்பதாண்டுகட்கு முன் தமிழர்க்கிருந்த வடமொழி மயக் கும், மொழியுணர்வுக் குறைவுமே ஆகும். அற்றை நாளில் பெரியார் திரு. ஈ. வே. இராமசாமியால் தோற்றுவிக்கப் பெற்ற தன்மதிப்பு (சுயமரியாதை)க் கழகம் பாரதிதாசன மிகுதியும் மாற்றியது எனின் மிகையில்ஆல. தொடக்கத்தில் இவர்க்கிருந்த சமயப்பற்றையும், கடவுட்