உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 9 – பற்றையும் அக் கழகக் கொள்கைகள் மாற்றியமைத்து, இவர் பாக்களுக்கு ஒரு தனி உணர்வும் உருவமும் கொடுத்தன. இவ்வுணர்வு இவர்பால் தலையெடுத்திராமற் போயிருப்பின் பாரதிதாசனும், பாரதியாரைப் போலவே இறைப் பாடல் களையும் பாட நேர்ந்திருக்கும். அவ்வாறு சிறு தெய்வ வணக்கப் பாடல்களையும் இந்திய தேசியப் பாடல்களையும் இவர் பாடியிருப்பாரானல், அவை பாரதியாரின் தெய்வப் பாடல்களினும் தேசியப் பாடல்களினும் சிறந்து விளங்கும் என்பதை மறுக்கமுடியாது. அதற்குப் பாரதிதாசன் தொடக் கக் காலத் தெழுதிய சுப்பிரமணியர் துதியமுது போன்ற வணக்கப் பாடல்களும், கதர்ப்பாட்டு, சமத்துவப் பாட்டுப் போன்ற தேசிய, குமுகாயப்பாடல்களுமே தக்க சான்றுக வளாகும். ஆனல் பாரதிதாசன் அவ்வாறு ஈடுபடாமைக்கு அவர் சார்ந்த பகுத்தறிவியக்கமும், அவர் கொண்ட தன் மானக் கொள்கையும், புரட்சியுள்ளமுமே காரணங்களாக விருந்தன. பாரதியாரிடம இருந்த பாத்திறத்தையும் அரிய ஆற்றலையும்கூடப் பாரதிதாசன் போன்றவர்களே தமிழுல குக்கு எடுத்துக் காட்டினர்கள். 'கல்கி அக்கால் 'பாரதியார் உலகக் கவி, அல்லர்’ என்று எழுதிய கட்டுரைக்குப் பாரதி யார் உலகக் கவி’ என்று பாரதிதாசன் எழுதிய மறுப்புப் பாடலே இக் கூற்றுக்குச் சான்ருகும். செந்தமிழ்ப்பற்றும் வெந்திறலாண்மையும் பாரதிசாச னுக்கு மிக்கிருந்தமையால், இவர் கொண்ட கொள்கைகளை எவர்க்கும் அஞ்சாது வெளியிடுவாராயினர். இவர்க்கிருந்த தமிழ்ப் பற்று அளவில் அடங்குவதன்று. "கனியிடை ஏறிய சுளையும்-முற்றல் கழையிடை ஏறிய சாறும் பனிமலர் ஏறிய தேனும்-காய்ச்சும் பாகிடை ஏறிய ருசியும், நனிபசு பொழியும் பாலும்-தென்னை நல்கிய குளிரிள நீரும்,