பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

سس۔ l0 -سم இனியன என்பேன் எனினும்.தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்” --என்றும் "செந்தமிழே! உயிரே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித்தேனே! நைந்தாய் எனில் நைந்து போகுமென்வாழ்வு' -என்றும் "தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனே என் தாய்தடுத்தாலும் விடேன்” - என்றும் தமக்குள்ள ஆராத் தமிழ்க் காதலை வெளியிடும் இடங்கள் பலவாகும். அவ் வரிகளெல்லாம் நெஞ்சில் இனிக்கின்றன. தமிழையும் தமிழ் நாட்டையும் மீட்க இவர் வெளியிடும் புரட்சிக் கருத்துகள் இளைஞர் நெஞ்சங்களில் எரிமலையின் கொந்தளிப்பையே வருவிப்பனவாம்! பாரதிதாசனின் உண்மை வரலாறு அவர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையில் இல்லை. அவரின் புரட்சியுள்ளத்தில்தான் ஒளிர்ந்து கிடக் கின்றது. இருபதாம் நூற்ருண்டின் மக்களுக்கே தமிழ்ப் புரட்சி என்ற சொல்லுக்கு விடை தெரியும். முற்காலப் புலவர்கள் இத்தகைய புரட்சியை இவ்வளவு வெளிப்படை யாக எங்கும் கூறிவிடவில்லை, - இன்பத் தமிழ் குன்றுமேல் தமிழ் நாடெங்கும் இருளாம்!” என்று தமிழர்க்கு எச்சரிக்கை செய்கின்ருர் பாவலர். அவர் தம் புரட்சித் துடிப்புக்குக் காரணமாக இருப்பதும் தமிழே: 'தமிழ் எங்கள் இளமைக்குப் பால்-இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்! என்று கூறித் தமிழைக்காக்கத் தமிழையே படையாக ஏந்தி இப் புரட்சிப்பாவலர் போரிடும் மறக்காட்சி, தமிழர் தம் உள்ளங்களில் என்றும் நிலைக்கும் அரிய ஆற்றலைப் பெற்றிருக்