பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 11 . கின்றது. இப் புரட்சி மனப்பான்மையால் இவர் பெற்ற துய ரங்கள் பலப்பல, இவர் பெருத நன்மைகள் கோடி. இருப்பி னும் தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை என்று தம்மைத் தாமே தேற்றிக் கொள்கின்ருர். தமிழன் உய்வுக்கும் வாழ்வுக்கும் அடிப்படையாக நிற்பது தமிழே என்று கூறித் தமிழ் இளைஞர் தமக்கு இவர் ஊக்கம் கொடுத்ததைப்போல் வேறு எந்தப் புலவரும் இதுவரை செய்ததில்லை. "உரம்பெய்த செந்தமிழுக் கொன்றிங்கு நேர்ந்ததென உரைக்கக் கேட்டால், - நரபெல்லாம் இரும்பாகி நனவெல்லாம் உணர்வாகி நண்ணி டாரோ' என்ற வரிகள் தமிழர்தம் மானமற்ற நெஞ்சை மறநெஞ்ச மாக்கிக் கூன்பெற்ற உடலை இரும்பாக்குகின்றன. இவ்வுணர் வால் அவர் பெற்ற துயர்களையும் தொல்லைகளையும் அவரின் அஞ்சாநெஞ்சம் பொருட்படுத்தியதில்லை. “ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ அல்லல்கள் வரின் ஏற்பேன்! ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக் குவப்புடன் நான் சேர்ப்பேன்!” என்று தம் ஈக நெஞ்சத்தை இளைஞர் தம் முனைப்பிற்கு எடுத்துக் காட்டாக முன் வைக்கின்ருர் பாவேந்தர். பெறுவ தற்கோர் ஏணி பெற்றும், ஏருத தமிழர் உயிர் வாழ்வதி னும் இறத்தல் நன்றே என்று சூடு சுணரயற்ற மரக்கட்டைத் தமிழர் தம்மைத் தட்டி எழுப்புந் திறம் இவர் பாடல்களில் உயிர் நாடியாகத் திகழ்கின்றது. இவருடைய வாழ்வே தமிழ் மறுமலர்ச்சி நிறைந்ததாகக் காட்சியளிக்கின்றது. வண் உமிழ் நைந்திடில் எது நம்மைக் காக்கும்? என்று இவர் கேட் கும் கேள்விக்கு இக்காலத் தமிழிளைஞர்தாம் என்ன விடை பகரப் போகின்ருர் ?