உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 12 — தமிழர்தம் மொழிப் புரட்சிக்கும் விடுதலைப் புரட்சிக்கும் நாட்டு வாழ்த்துப் பாடிய முதல் விடுதலைப் புலவன் பாரதி தாசன். கழகக் காலத்திற்குப்பின் தமிழ்ப் புலவர் உரிமையு மின்றி எழுச்சியுமின்றி மன்னர்தம் மதுமயக்கங்களிலும், மங்கையர்தம் கொங்கை குறிகளிலும், பட்டாடை முத்து மாலை முதலிய மணியாரவாரங்களிலும் ஈடுபட்டு, நாட்டை யும் நாகரிகத்தையும் பிறர் ஏச்சுக்கும், பேச்சுக்கும், கைவாள் வீச்சுக்கும் ஆளாக்கி வந்தனர். அதனல் ஈடும் எடுப்புமற்று, உயர்ந்த நாகரிகம் படைத்து முழுவளர்ச்சியுற்ற ஒருமொழி யாகத் தமிழ் இருந்தும், போலிப் புலவர்தம் கையடைவால் நலிவும் மெலிவும் பெற்றுத் தன் உயர்ந்த நிலையினின்றும் இழியலானது. பாரதியார் ஊட்டிய உணர்வுப் பாலைப் பருகி, அவரினும் மேலாக மொழி காக்க வீறு கொண்டெழுந் தார் பாவலர் பாரதிதாசன். 'தமிழ்என்னும் பேருணர்ச்சி, இந்நாள் போலே தமிழ்நாட்டில் எந்நாளும் இருந்ததில்லை; தமிழர்க்குத் தொண்டுசெய்யும் தமிழனுக்குத் தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய்ப் போகும்!" என்ற வரிகளில் அவர் நெஞ்சில் நெருப்புப் பொறி போலக் கிளம்பிய உணர்வு, கீழ்வரும் பாட்டில் கொழுந்துவிட்டு எரியும் தணலாகி, இவ் வையத்தையே நடுங்க வைப்பதைப் பாருங்கள். . "செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுநடுங்கும் வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே! பாவலரின் புரட்சிக் கன்ல் பற்றி எரிகின்றது. அதன்மேல் ஆணையிடுகிருர் பாவலர்.