பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 13 — "எரிகின்ற எங்களின் நெஞ்சமேல் ஆணே! இனியெங்கள் ஆட்சிஇந் நாட்டிலே!” இதைவிடத் துணிவாக எழுதிய பாவலர் இதுவரையில் தமிழ் நாட்டில் தோன்றவில்லை. இத்தகைய புரட்சிக் குரலுக்கும் செவிமடுக்காத தமிழரும் இனி உய்யப் போவதில்லை. ஏனெ னில் இதற்குக் காரணமாக இருக்கின்ற இற்றை எழுத் தாளர்கள் எல்லாரும் கோழைகள்.வெறும் இலக்கியக் காதலில் தம் நெஞ்சங்களைக் கரையவிடும் மானமற்றவர்கள். வரிக்கு வரி நயங்களை வாரியிறைத்துக் காசு பறிக்கின்ற தன்மான மற்றவர்கள். அவர்கள் தம் கைகளில் பிடித்திருக்கும் எழுது கோல்கள் குள்ளநரிகளின் தொடை எலும்புகளால் ஆனவை. அவற்றில் ஊற்றப்பட்ட மை பெண்ணடிமைகளின் குருதி நாளங்களினின்று வடித்தவை. அவர் எழுதும் எழுத்துகள் முனை முறிந்த வாள்கள்! அவர்தம் கருத்துகள் காதறுந்த ஊசிகள் அவை ஒருவர் உள்ளத்தையும் தீண்டுவதில்லை. போலி மழுப்பலும், கூலிக் காசின் களிம்பும் ஏறப்பெற்ற அவர்தம் நூல்கள் எந்த மக்களமைப்பையும் முன்னேற்றி விடப் போவதில்லை. பாவேந்தர் கூறுவது இது: "இருக்கும்நிலை மாற்றஒரு புரட்சிமனப் பான்மை ஏற்படுத்தல், பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் கடனம்” “.........அந்தமிழர் மேன்மை அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடுபல வாழ்ந்தால் எதிர்ப்பதன்ருே தமிழர்களின் எழுதுகோல் வேலை! ஏற்றசெயல் செய்தற்கும் ஏன் அஞ்ச வேண்டும்?” அவர் கேள்வி இது! புரட்சிப் பாவலரின் எழுச்சிக் கருத்துகள் தன்மதிப்புக் கழகத்தின் கண்ணுடிகள். தன்மதிப்புக் கழகத்தைத் தோற்று வித்த பெரியார் திரு. ஈ. வெ.இரா. கூடத் தமிழ்மொழி பற்றி யும் தமிழ்நாடு பற்றியும் கூறமுடியாமல் திணறிய கருத்து