பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. தாத்தா, படம் போட்டுத் தா! பாவேந்தார் வீட்டுக்கு நாள்தோறும் பெரியவர்கள் பலர் வந்து, பேசியிருந்து விட்டுப்போனபடியே இருப்பார்கள். அவர்கள் அவ்வாறு வந்து பேசிக் கொண்டிருக்கையில். பாவேந்தர் தமக்கேயுரிய நகைச்சுவை உணர்வும், சினமும் தோன்ற பல செய்திகளைப் பற்றி அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பார். அக்கால் அவர் பெயர்த்தி (வசந்தாவின் மூத்த மகள்) மழலைபேசும், சிறு குழந்தை. அது சிறிய கரும்பலகை, ஒன்றையும் எழுதுகுச்சியையும் எடுத்துக் கொண்டுவந்து, மிக வும் ஈடுபாடாகவும் சுவையாகவும் பேசிக் கொண்டிருக்கும் தாத்தாவின் மடியிலேறி அமர்ந்து கொண்டு. "தாத்தா, எனக்கு ஒரு படம் போட்டுத் தா” என்று மழலைபேசிக் கொஞ்சிக் கேட்கும். பாவேந்தர் எவ்வளவு உணர்வொடு பேசிக் கொண்டி ருந்தாலும், அந்த உணர்விலிருந்து உடனே மாறிக் குழந் தையை ஒரு முத்தமிட்டுக் கொஞ்சி, கற்பலகையையும் எழுதுகுச்சியையும் வாங்கிக் கொண்டே, இங்கே கொண்டா உனக்கு என்ன படம் வேண்டும்” என்று கேட்டு, அரை நொடியில் ஓர் ஆட்டின் படத்தையோ மாட்டின் படத் தையோ போட்டுக் காட்டி, அதனுடன் விளையாடத் தொடங்கி விடுவார். வந்திருந்தவர்கள் தங்கள் பேச்சை யெல்லாம் விட்டுவிட்டு, இந்தப் பெரிய "குழந்தை'யும் அந் தச் சின்னக் குழந்தையும் விகளயாடிக் கொண்டிருப்பதைப் பார்த்துத் தாங்கள் வந்த வேலையை மறந்து மெய்ம்மகிழ்ந்து போயிருப்பார்கள்: