பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. நேரே இங்கயே வந்தட்டியா? அடிக்கடி பாவேந்தரிடம் பல வகையான எழுத்தாளர் களும் புலவர்களும் பாவலர்களும் வருவதுண்டு. வருபவர் கள் அவரிடம் தாங்கள் எழுதிய நூல்களைப் பற்றியும், செய்த ஆராய்ச்சிகளைப் பற்றியும் பாடல்கள் பற்றியும், கூறிப் பாவேந்தரின் கருத்துரைகள் மதிப்புரைகள் பாராட்டு ரைகளை வாங்கிச் செல்வார்கள். சிலர் அவரிடம் அவற்றைக் காட்டி நேரமிருந்தால் திருத்தம் பெற்றுச் செல்வார்கள். ஒருமுறை திருச்சிப் பகுதியிலிருந்து புலவர் ஒருவர் வந்தார்: பாவேந்தரிடம் அப்பொழுது நான் பேசிக் கொண்டிருந்ததால், அவருக்கு என்ன வேண்டும் என்றுகேள்' என்று என்பால் சொல்லியனுப்பினர். அவர், தாம் ஒரு நாடகம் எழுதிக் கொண்டு வந்திருப்பதாகவும், அதைத் திருத்தித் தர வேண்டும் என்று வேண்டிக் கொள்வதாகவும் கூறினர். அதைக் கேட்டுக் கெண்டிருந்த பாவேந்தர், தமக்கு அதற்கெல்லாம் இப்பொழுது நேரமில்லை என்று கூறினர். ஆனல் வந்தவர் எப்படியாவது பார்த்துக் கொடுக் கும் படி கேட்டு, நின்று கொண்டேயிருந்தார். உடனே பாவேந்தார் சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்து வந்து, நாடகத்தை எழுதிக் கொண்டு அதைத் திருத்திக் கொடுக்க வேண்டும் என்று நேரே இக்கேயே வந்துட்டியே, அங்கெல் லாம் யாராவது ஒரு தமிழ்ப் புலவரிடம் காட்டித் திருத்திக் கொண்டிருக்கக் கூடாதா? நானேதான் திருத்தவேண்டுமா? இதற்கெல்லாம் எனக்கு நேரம் எப்படியிருக்கும்' என்று கடிந்து கொண்டார் வந்தவர் வருத்தம் தெரிவித்துவிட்டுப் போய்ச்சேர்ந்தார்.