பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. அப்ப, தாக்கிக் கீழே போட்டுடு! பாவேந்தர் பாடல்களைத் திறனாய்வு செய்து ஒரு நூல் அவரிடம் வந்தது. அதைப் பாவேந்தர் என்னிடம் படிக் கக் கொடுத்து, நன்ருக எழுதியிருக்கின்ருரா, பார்' என்று சொன்னர். . நான் அதை முழுமையாகப் படித்து விட்டு, 'ஏதோ எழுதியிருக்கிருர். அவ்வளவு சிறப்பாகச் செய்திருக்கிருர் என்று சொல்லமுடியாது. உங்கள் பாடல்களின் சிறப்பியல் களை நானே எழுதல்ாம் என்றிருக்கின்றேன். வேறு யாரும் அதன் சிறப்புகளே அவ்வளவு எளிதில் மதிப்பிட்டு விட முடி யும் என்று நான் நினைக்கவில்லை’ என்று கூறினேன். பாவேந்தர் உடனே சட்டென்று, அப்ப, அதைத் தூக்கிக் கீழே போட்டுடு” என்று கூறிஞர். எதையும் விரைந்து முடிவு செய்து விட க் கூடிய மனப்பாங்கு அவருடையது. .