பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. ஓடையில் தாமரை பூக்குமா? பாவேந்தரின் இசையமுது முதல் தொகுதியில் ஒரு பாடல் உண்டு. அதில் கீழுள்ள ஒர் அடி வருகிறது. 'ஒடையில் தாமரை வாடிடும் என்ருன்; உள்ளங்கை விரித்தும் கூப்பியும் நின்றேன்!” பன்ைபது அது. - பாவேந்தரிடம் பேசிக் கொண்டிருக்கையில் ஒரு நாள் மாலை, அவரிடம் இவ்வடிகளை எடுத்துக் கூறி, இந்த அடி வில் வரும் கருத்தைப் பற்றி ஒருவர் என்னிடம் ஒர் ஐயம் தெரிவித்தார்' என்றேன். "என்ன, அது?'என்ருர். "ஓடையில் தாமரை பூக்குமா என்று கேட்டார். என்றேன். 'அதற்கு நீ, என்ன சொன்னுய்?’ என்று கேட்டார் 'பூக்கும் என்று சொன்னேன். ஒடையில் தண்ணிர் ஓடும் பொழுது, எங்காவது ஒரு வளைவில் அது திரும்புகை யில், அந்த மூலையில் தண்ணீர்த் தேக்கம் ஏற்படும், அதில் தாமரை பூத்திருக்கும்’ என்று சொன்னதாகச் சொன் னேன். - அதுதான் சரி: அப்படித்தான் சொல்ல வேண்டும்: என்று தம் ஒப்புதல்யும் மகிழ்ச்சியையும் ஒருங்கே தெரிவித் தார், பாவேந்தர்.