பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. பாவேந்தர் படத்தில் - தீப்பற்ருமல் தடுத்த பழனியம்மாள்! பாவேந்தர் மறைவுக்குப்பின் பாவேந்தர் குடும்பம் கடலூரிலிருந்த நம் வீட்டிற்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டு இருக்கும். பாவேந்தரின் துணைவியார் திருவாட்டி. பழனியம்மாள் அவர்களும் அடிக்கடி வீட்டிற்கு வந்து, இரண்டொரு நாட்கள் தங்கிப் போவார்கள். எம் துணைவியாரிடமும் நம் பிள்ளைகளிடமும் அவருக்கு அதிகமான ஈடுபாடு. வரும் பொழுதெல்லாம் அவர்களுக்குத் தின்பண்டங்களும் வீட்டிற்கு வேண்டிய சிறு சிறு பொருள் களையும் அன்பளிப்பாகக் கொணர்ந்து தருவார்கள். எம் துணைவியார்க்கும் பிள்ளைகளுக்கும் அவரின் வருகை நிரம்பப் பிடிக்கும் வெறுந்தரையில் உருண்டு கொண்டே, அவர் களிடம் அம்மையார் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் நாள்தோறும் பேசி மகிழ்ந்து கொண்டிருப்பார்கள். ஒருமுறை தென்மொழி இதழ் ஒன்றில் பாவேந்தர் படம் அச்சாகியிருந்தது. அச்சகக் கழிவுத் தாள்களை யல்லாம் எம் துணைவியார் அடுப்புப் பற்றவைக்க எடுத்துச் செல்வது வழக்கம் . அம்மையார் வந்திருந்தபொழுது, அப்படிப்பட்ட தாள் கள் அடுப்படிக்கு வந்திருந்தன. எம் துணைவியாருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, அம்மையார் அடுப்பைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள், பக்கத்தில் உள்ள தாள்கள் ஒவ்வொன் முகச் சுருட்டிச் சுருட்டிச் அடுப்பில் போட்டு எரித்துக் கொண் டிருந்தார்கள். அப்பொழுது அவர்கள் பாராமல் அடுப்பில் போட்டு விட்ட தாள் ஒன்றில் தீப்பற்றி எரிந்து கொண்டே