பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 216 — வந்தது. அதில் பாவேந்தர் படம் அச்சாகியிருந்ததை அப் பொழுது பார்த்து விட்டார்கள். அந்தப் படத்தில் தீப் பற்றுவதற்கு முன், அடுப்பிலிருந்து அந்தத் தாளை வெளியே எடுத்துத் தீயைச் சட்டென்று அணைத்து விட்டார்கள். நல்லவேளை, பாவேந்தர் படம் எரிந்து விடவில்லை! அவரின் படத்திலும் கூட தீப்பற்றக் கூடாது என்று காத்த அவரின் அன்புணர்வை என் துணைவியாரும் பிள்ளை களும் அடிக்கடி நினைவு கூர்ந்து வியந்து நிற்பார்கள்!