பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 20 — நெற்சேர உழுதுழுது பயன் விளக்கும் நிறையுழைப்புத் தோள்களெல்லாம் எவரின் தோள்கள்? கற்பிளந்து மலைபிளந்து கணிகள் வெட்டிக் கருவியெல்லாம் செய்துதந்த கைதான் யார் கை? பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்குலத்தைப் போய்எடுக்க அடக்கியமூச் செவரின்மூச்சு?” என்று அவர் கேட்ட கேள்விக் கணைகள் தொழிலாள மக்க ளின் உள்ளங்களே ஊடுருவின. அவர் தாம் மாந்த இனத்தை உருவாக்கும் பெருந்தொழிலைப் புரிந்து வந்தாலும், வாழ்வின் அடிப்படியில் உரிமையற்ற அடிமைகளாய் உழல்வதைப் பாவலர் வாயிலாக உணர்ந்து கொதிப்படையலானர். எல்லார்க்கும் தேசம், எல்லார்க்கும் உடைமை எலாம் எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே”. என்ற பொதுவுடைமைக் கொள்கையில் அவர் வி டு த் த உரிமைப் பட்டயம் தொழிலாளர் கைகளுக்கு வலுவேற் றியது. "இல்லாமை எனும் பிணி இல்லாமல், கல்வி நலம் எல்லார்க்கும் என்று சொல்லிக் கொட்டு முரசே!” -என்று அவர் கொட்டிய முரசொலி ஏழை எளியவர்தம் முதுகுகளே நிமிர்த் தியது. குலவேறுபாட்டானும் சமயப் பூசல்களானும் அடி மைப்படுத்தி வைத்திருந்த அத் தொழிலாளர் கூட்டத்திற் குத் தன்மதிப்பும் தன்னுணர்வும் ஊட்டினர். நாள் முழுதும் வெயிலிலும் மழையிலும் உழைத்தும் முன்னேருமல் கிடக்கும் அவ்வேழைகள் முன்னேருமைக்குக் காரணமாகக் கூறப்படும். 'விதி" கடவுள்' என்ற போலி அமைப்புகளைக் கருத்து வெடிகளால் தகர்த்துச் சுக்குநூருக்கினர். உழைப்பது, உழவு செய்வது, உடை வெளுப்பது முதலியவை - . . . :