உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 19 — ஓயாத எழுத்து வேலைகளாலும், தமிழ்ப் புரட்சியாலும் பாவலர் தாம் ஆற்றிக்கொண்டிருந்த பணியை 1946-இல் விடவேண்டுவதாயிற்று. அதன் காரணமாக அவருடைய குடும்பம் புதுவையில் உள்ள சுற்றுப்புற ஊர்களான நெட்டப் பாக்கம், கூனிச்சம்பட்டு, ஆலங்குப்பம், முத்திரைப்பாளையம் முதலிய ஊர்களுக்கும். திருமலைராயன்பட்டினம், திருநள் ளாறு முதலிய வெளியூர்களுக்கும் அடிக்கடி இடம் பெயர்ந்து செல்ல வேண்டியிருந்தது. பாவலர் ஆசிரியப் பணியிலிருந்து விலகியதும் 1948-இல் குயில் என்ற பாட்டு இதழைத் தொடங்கி அவ்வப்பொழுது தமிழர்க்கு உணர்வேற்றிவந்தார். குயில் மாதம் ஒருமுறை வெளிவந்து கொண்டிருந்தது. பாட் டாலேயே தொடங்கப் பெற்ற முதல் இதழ் பாரதிதாசனின் ‘குயில்'தான். இப் புதுவைக் குயில் செய்த புரட்சி கொஞ்ச நஞ்சமன்று. அரசியலிலும் ஈடுபட்டுக் குரல் கொடுக்கத் தொடங்கியது. ஆளுநர்களைக் கண்டித்தது. அரசினர் தமிழர்க் கிழைத்த கொடுமைகளே அஞ்சா நெஞ்சுடன் சுடச் சுட அவ்வப் பொழுது எடுத்துக் கூறித் தமிழர்க்குத் தோன்ருத் துணையாக நின்றது. பாவலர் அக்கால் ஓய்வுக்கால ஊதிய மாகப் பெற்றுவந்த உருபா முப்பந்தைந்திலேயே குடும்பம் நடந்து வரலாயிற்று. அவர் தந்தையின் சொத்துகளும் வாணிகத்தில் கரைந்தன. பாவலர் கு டு ம் ப ம் வறுமைத் தொல்லைக் காட்பட்டுப் புயலிற் சிக்கிய கலம் போலத் திகைத்தது. - தம் வாழ்வுப் போராட்டத்திற் கிடையேயும் பாரதி தாசன் த மி ழ் உணர்வால் தொழிலாளர்களிடையேயும் புரட்சிக் கனல் எழுப்பினர். தொழிலாளர்கள் எல்லா வகை யானும் மிடிமைப்பட்டுக் கொண்டிருந்த நேரம் அது. உரிமையற்றுக் கிடந்த அந்த நெஞ்சங்களைத் தட்டி யெழுப்பி உரிமை கேட்கத் தூண்டினர். அவரின் எளிய தமிழ் நடை தொழிலாளர்களின் உள்ளங்களை மிகுவாகத் தீண்டியது. “சிற்றுாரும் வரப்பெடுத்த வயலும், ஆறு தேக்கிய நல் வாய்க்காலும், வகைப்படுத்தி