பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரப்பும் நாட்டமும் உடையவராக இருந்தனர் என்பதும், அவ்வாறு வினைபுரிவார்க்குத் தமிழடிமைகள் துணை நின்றமை யும், பாரதியார் பாடல்களில் பாரதநாடு மிகவுயர்த்தப் பட்டுப் பேசப் பெறுகின்றமையும், பாரதிதாசன் பாடல் களில் அடிமையுற்றுக்கிடக்கும் தமிழர்க்கு வேண்டிய ஆக்க மும் ஊக்கமும் பேரளவில் ஊட்டப்பெற்று.நாட்டு விடுதலைக் கும் மொழிவிடுதலைக்கும் போராடுமாறு அவர்க்கு அழைப்பு விடப் பெற்றிருப்பதுமே, அவ்வாறு பாரதிதாசன் பாரதி யார்போல் போற்றப் பெருமைக்குக் காரணங்கள் ஆகும் என்று அறிந்து கொள்க. இத்தகைய காரணங்களை ஒருவாறு நம் பாரதிதாசனும் பிறழ உய்த்துணர்ந்தே தம் இ று தி நாட்களில் தமிழ் உணர்வோடும், தமிழ்நாட்டு உண்ர்வோ டும், பாரத நாட்டுப் பற்றையும் ஏற்றி ஒரு சில பாடல்களே யாக்க நேர்ந்தது. ஆனல் அத்தகைய பாடல்களில் உயிர் இல்லை. காரணம் ஏற்கனவே அவர் உள்ளத்தில் த மி ழ் மணம் சூழ்ந்திருந்ததுதான். இவ்வாறு செந்தமிழ் உணர்வால் தம்மை முழுமையும் உருவாக்கிக் கொண்டிருந்த நம் புரட்சிப் பாவலரின் முதல் பாட்டுத் தொகுதி 1938-இல் திருவாளர் குத்துTசி குருசாமி, திருவாட்டி குஞ்சிதம் குருசாமி அவர்கள்தம் பேருழைப்பால் வெளியிடப் பெற்றது. அத் தொகுதியில் வந்த பாடல்கள் தமிழ்க்கும் தமிழர்க்கும் புதிய உணர்வேற்றின. நெடுநாட் களாக அவர் தூங்கிக் கொண்டிருப்பது அவர்கட்கே தெரிய லாயிற்று. அதன் பின்னர் அவர் தம் மூத்த மகளின் திருமணம் 1944-இல் தடைபெற்றது. அந்த ஆண்டில் தான் பாரதிதா சன் தம் உயர்ந்த இலக்கிய வாழ்வு நூலான 'குடும்ப விளக்கை வெளியிட்டார். அக் குடும்ப விளக்கு வெளிவரு வதற்கு அவரின் மூத்த மகள் சரசுவதிதான் காரணம் என்று அவரே வெளிப்படையாகப் பலரிடமும் கூறியுள்ளார். திருவாட்டி சரசுவதி உயர்ந்த ஒழுக்கமும், சிறந்த பண்பாடும் வாய்ந்த குடும்ப விளக்கு! அதன் பின்னர் 1945-ல் தமிழியக் கம் என்ற அவரின் மற்ருெரு சிறந்த நூல் வெளிவரலாயிற்று.