உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று பாவேந்தர் வினவிய விளுக்களுக்கு விடை எழுதப் பல்லாண்டுகள் செல்லும். அதுவரை இப் பாடல்கள் தமிழர் உள்ளங்களை கொக்கிப் புழுக்கள் போலக் குடைந்து கொண் டிருக்கும். "நம்நாடு தமிழ்நாடு; நாமெல்லாம் தமிழ்மக்கள்; இன்பம் கோரி இந்நிலத்தில் வாழ்வதெனில் மூச்சாலே! அம்மூச்சுந் தமிழே! அந்தப் பொன்னை தமிழாலே தமிழ்ச்சான்ருேர் புகன்றதமிழ்ச் சட்டம் ஒன்றே! இந்நாட்டை ஆண்டிடுதல் வேண்டுமதை இகழ்வாரை ஒடுக்க வேண்டும்’ இத்தகைய மொழிக்காப்பு, மொழியுணர்வு தமிழக மண்ணில் பாரதிதாசனல் ஊன்றப்பெற்றன. இதுபோன்ற நூற்றுக் கணக்கான தமிழுணர்வுப் பாடல்களையும் ஆயிரக் கணக் கான சிறு சிறு குறிப்புகளையும் ஆங்காங்கே தம் பாடல் நூல்களில் பரவவிட்டிருந்தும், தாமே தமிழாக மாறியிருந் தும், தாம் எழுதிய ஏறத்தாழ முந்நூறு தலைப்பிட்ட பாடல் களில் ஆறே ஆறு பாடல்களைத் தமிழ்க்காக எழுதிய பாவலர் சுப்பிரமணிய பாரதியார், பாரதிதாசனினும் மேலாகத் தமிழர்களாலேயே கொண்டாடப்படுகின்றமைக்கும், புகழ் பெற்றமைக்கும், பல மொழிகளிலும் அவர்தம் பாடல்கள் மொழிபெயர்க்கப்படுகின்றமைக்கும் காரணம் என்ன? அவ ரின் பாடல்கள் இவரின் பாடல்கள் போல் ஒரு மொழி பேசும் நாட்டிற்கே உரியவாக இராமல், எல்லா இனத்தினர்க் கும், மொழியினர்க்கும் தேவையானவாக இருப்பதாலா ? இல்லை இல்லை. பாரதிதாசன் பாடல்களிலும் அத்தகைய பொதுமைப் பாடல்கள், வாழ்வு இலக்கியங்கள் பல உண்டு. ஆகையால் அது காரணமாகாது. பி ன் ரை எதுவெனின், பாரதியார் பார்ப்பனர் என்பதால், பார்ப்பனர்கள் அவற்றை வெளிக்கொணர்வதினும், பரப்புவதினும் தமிழரினும் பிர