உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 16 — நாய்வாலும் நிமிர்வ தில்லை. என்கடன் என்ன நெஞ்சே? பணி செய்து கிடப்ப தொன்றே! மேலைநாட்டு விடுதலைப் புலவர்களுக்கு இவ்வளவு வேலை யில்லை. அவ்வந் நாட்டு மக்கள் இத் தமிழ் நாட்டு மக்களைப் போல் அறிவுக்கான அத்தனை வழிகளிலும் குருடர்களாக இல்லை. அரசியல் தெரியாராய், குமுகாய அமைப்பு விளங் ராய், பொருளியல் நினையாராய், அறிவியல் முனையாராய், மூடநம்பிக்கை நிரம்பிய பேதைப் புழுக்களாக இத் தமிழர் கள் நெளிவதைப்போல், பழைய உரோம, கிரேக்க, ஆப்பிக்க, மக்கள்கூட நெளியவில்லை. இத்தகைய தெளிவு நலஞ்சாராக் கழிசடைகளுக்கு மொழிப்பற்றையும், நாட்டுப் பற்றையும், குமுகாய அரசியலறிவுகளையும் சாற்றி விழிப்புறச் செய்வ தற்கு நூறு பிளேட்டோக்களும், ஆயிரம் உருசோக்களும், பத்தாயிரம் மார்க்சுகளும், நூருயிரம் வால்டேர்களும் கூடப் பயன் படார். இந் நாட்டிற்குத் தேவையானதெல்லாம் ஓர் அணுக் குண்டே! அல்லது ஒர் எரிமலையே! இடித்திடித்துக் கட்டுரை கூறின் செவி கொளார், கண்விழியார்; நெட்டுயிர்ப் போடுற்ற பிணங்களாக உள்ள தமிழ்நாட்டு மக்களைப் பாரதிதாசனின் இத்தகைய பாடல்கள் விழிப்படையச் செய்ய இன்னும் நூருண்டுகள் போகவேண்டும். அதன் பின்னர்தான் இவர் ஊன்றிய புரட்சி வித்தின் உருவம் தெரியும். "தமிழர் நாம் என்ருல் நம்பால் தமிழ் உண்டா? தமிழ் ஒழுக்கம் அமைவுறச் சிறிது முண்டா? அற்றைய மறத்தனந்தான் கமழ்ந்திடல் உண்டா? நெல்லின் கலைநலம் உண்டா? கல்வி உமிமுனை அளவி லேனும் ஒற்றுமை உண்டா?”