பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 22 — -என்று உறங்கும் தொழிலாளர் உலகுக்கென அவர் வாயி னின்று தெறிக்கும் புரட்சிக் கனல்போல் எந்தத் தமிழ்ப் பாவலன் வாயினின்றும் இவ்வளவு தெளிவாக வரவில்லை. உண்மையும் உ ரி ைம யு ம் பெற்ற பாட்டுநெஞ்சினின்று பிறக்கும் கூரிய சொற்களின் வலிவு எத்தகையது என்ப தற்குப் பாரதிதாசனரின் இத்தகைய வ ரி க ள் சான்று! தொழிலாளர் முன்னேருமைக்கு அவர்பால் ஒற்றுமை உணர் வின்மையே காரணம் என்றும் அவர்க்குப் புலப்படுத்தினர். ஒற்றுமையில்லாமையால், தொழிலிலும் முன்னேற்றமில்லை. தொழிலாளரும் முன்னேறுவதில்லை எ ன் று தெளிவாக அவர்க்கு எடுத்துரைத்தார். "கூடித் தொழில்செய்யாக் குற்றத்தால் இன்றுவரை மூடிய தொழிற்சாலை முக்கோடி”. என்று அவர்க்கும் அரசினர்க்கும் நினைப்பூட்டினர். அவர்க ளுக்குள் இருக்கும் குலப்பிரிவுகளே அவர்களின் ஒற்றுமை யின்மைக்குக் காரணம் என்று தெளிவு படுத்தினர். அந்த இடைச் சுவர்களை இடித்துத் தள்ளி அவர்களை முன்னேற்ற வழிக்கு வாருங்கள் என்று முழங்கினர். "இடையில் வைத்த சுவரை இடித்து, விழிகள் இடையில் திரையினை விலக்கி, நாட்டோடு நாட்டை இணைத்து மேலே ஏறு! வானை இடிக்கும் மலைமேல் ஏறு! விடாமல் ஏறு மேன்மேல்! ஏறி நின்று பாரடா எங்கும்: பாரடா உனது மனிதப் பட்டாளம்!” என்று நம் நாட்டுத் தொழிலாளர்களை மட்டுமன்று, உலகத் தொழிலாளர் அவ்வளவு பெயர்களையும் ஒன்றுபட இவர் விடுக்கும் அழைப்பு எதிர்காலத்தில் உலகின் பல்வேறு முனை களிலும் எதிரொலிக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை. இவ்வுலகம், முதலாளிகளுடையதன்று:உழைப்பவருடையதே!