பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 23 - ஆகையால் அவர்கள் தயங்குதல் வேண்டா என்று அச்சம் தீர்த்தார் "உடலைக் கசக்கி உதிர்த்த வெயர்வையின் ஒவ்வொரு துளியிலும் கண்டேன் இவ்வுலகு உழைப்பவர்க் குரிய தென்பதையே!” என்று இவ்வுலகத்தையே அவர்க்கு உரிமையாக்கும் இப் புது வைப் பாவலரைப் போல் தொழிலாளர் உலகத்தைத் தட்டி எழுப்பிய வேறு புரட்சியாளர் தமிழ் நாட்டில் உண்டோ? திரும்பிய பக்கமெல்லாம் தொழிலாளர் முழக்கம் எழுமாறு அவர் எழுதியப் பாடல்கள் மக்கள் உரிமையுணர்வைக் கீறின, "சித்திரச் சோலைகளே! உமை நன்கு திருத்தஇப் பாரினிலே!-முன்னர் எத்தனே தோழர்கள் ரத்தம் சொரிந்தன ரோ?உங்கள் வேரினிலே ஆர்த்திடும் எந்திரக் கூட்டங்களே! உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ? நீங்கள் ஊர்த்தொழி லாளர் உழைத்த உழைப்பில் உதித்தது மெய் அல்லவோ? -எனப் பாவலர் தொடுக்கும் விளுக்களில் எத்தகைய உரிமைக் குரல்கள் குமுகாயத்தின் கட்டுக்கோப்புகளைத் தகர்த்துக் கொண்டு வெளிப்படுகின்றன: உழைப்பாளர் களின் உரிமைகளை நசுக்கிக்கொண்டு ஊர்ப்பணத்தைக் கொள்ளையடிக்கும் முதலாளிமார்கள் புரட்சிப் பாவலரின் அரிமா முழக்கத்திற்கு அஞ்சி நடுநடுங்கினர். சமயத் தலைவர்கள் தங்கள் கோயில்களின் கருவறைகளில் போய்க் கற்படிமத்தோடு கற்படிமாகக் கட்டிக்கொண்டு கிடந்தனர். கூடித் தவிக்கும் குழந்தை, மனைவியர் கூழை நினைத்திடும் போதிலே -கோயில்