உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 24 — வேடிக்கை யாம்தெரு மீதிலே-செல்வர் வாடிக்கை ஏற்பீரோ காதிலே!” -என்ற வரிகளில் தெறிக்கும் உண்மையை மக்கள் உலக உணருமாறில்லை. அவர் தாம் வந்த வழி அத்தகைய மீளா அடிமைத்தளையை அவர்கள் பாங்கில் விரித்துவிட்டிருக் கின்றது. அவர்களின் உடல்களில் மட்டுமின்றி உயிரினும் உணர்வினும் அ டி ைம அணு ஊடுருவிக்கொண்டுள்ளது. இத்தனைக் குறைபாடுகளையும் வைத்துக்கொண்டு பாரத நாடென்றும், உரிமை என்றும் தேசியத் திருவிளையாடல்கள் நிகழ்த்திவரும் அரசியலார் தமக்கு மண்டையில் ஆணியை அறைகின்ருர் நம் புரட்சிப் பாவலர். "பஞ்சமர் பார்ப்பார் என்பதெல்லாம் பாரத நாட்டுப் பழிச்சின்னத்தின் பெயர்” என்று பாரத நாட்டுப் பெயர்ப் போற்றிகளின் வாய்களில் கழிசடைப் புனலை ஊற்றி நாற்றமடிக்கின்றது பார்’ என்று தம்மின் உரிய நெஞ்சத்தோடு கூறுகின்ருர். தொழிலாளர்தம் இத்துணை அறியாமைக்கும், முன்னேற்றத் தடைக்கும் அரசினரே துணை நிற்கின்ருர் என வெளிப்படையாக உணர்த்துகின்ருர். 'கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர் கொள்ளையடிப் பதும் நீதியோ?-புவி வாழ்வதுதான் எந்தத் தேதியோ ? சோரும் துரைத்தனத்தாரும் பெரும் பொருள் கொண்டவர்க்கே நலம் கூட்டுவார்-உழைப் போரிடமே கத்தி திட்டுவார்?" # "கட்டத் துணியளித்தார்; கல்லுழுது நெல்லளித்தார்; வெட்டிக்காடெல்லாமே வீடாக்கித் தந்தார்!