உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 25 — எருக்கு முளைக்கும் இடர்ப்பாம்பின் பல்போல் பருக்கைக்கல் வாய்த்தும் படுபள்ளம் வாய்த்தும்முள் முட்டுநிலம் நேராக்கி, முல்லை பரப்பியதோர் பட்டுமெத்தை போன்ற நிழற் பாதை யளித்தார்: தரைமீது பட்டணங்கள் தந்தார்; கடலின் திரைமீது பட்டணங்கள் செல்லும் படியமைத்தார்: அவர்களை நீ மாந்தர் எனவும் மதிக்கவில்லை; உன்னேயவர் வேந்தர் எனவும் மதிப்பாரோ ?” எண்ணற்ற கொடுமைகளுக்கும் வேராக இருக்கின்ற அரசு. வடநாட்டார் கையில் சிக்கித் தொல்லைப் படுவதைப் பாவலர் துணிவுடன் முழங்குகின்ருர். தமிழ் மக்களுக்கு உண்மையை யும் உணர்த்துகின்ருர். 'வடநாடு தென்னுட்டை வீழ்த்தச்-செய்த வஞ்சங்கள் சிறிதல்ல தம்பி!” இவ்வாறு அ வ ர் தமிழ்க்கும் தமிழர்க்கும் போராடிய போராட்டம் மிகப்பெரிது. நாட்டின் உரிமையைப் பாட் டாலே காத்த பாவலர் அவர். செத்தழியும் தீந்தமிழ்க்கு, எத்திசையும் காப்பளிக்கவேண்டி அவர் முழங்கிய முழக்கங் களால் தமிழர் கூட்டம் கனன்றெழுந்தது. பாவலர்தம் பாத்திறத்தைப் பாராட்டி ஏராளமான பரிசுகளைத் தமிழர் அவர்க்களித்தனர். 1946-இல் சென்னையில் நாவலர் திரு. சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடந்த கூ ட் டம் ஒன்றில், திருவாளர். அண்ணுத்துரை தம் பெருமுயற்சியால், திரட்டிய உரூபா இருபத்தைந்தாயிரம் கொண்ட பண முடிப்பு ஒன்றினைப் பாவேந்தர்க்கு அளித்தார்; அவர் கடமை யுணர்வைத் தமிழர் என்றும் மறவார். பாவலர் குடும்பம் பெருகிற்று. திருவாட்டி சரசுவதிக்குப் பிறகு மன்னர்மன்னனும் இரண்டு பெண்களும் பிறந்தனர். புதுவை அரசினர் தொல்லையால், அவர் நடத்திய குயிலும்