உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 28 - இடை நின்றுபோய் அண்மைக் காலத்தேதான் மீண்டும் வெளிவந்தது. குடும்பத்தில் பலகோளாறுகள், பாவலர், பழநியம்மா அச்சகம்’ என்ற பெயரால் நிறுவிய அச்சுக்கூட, மும் ஒரு வீடும் மட்டுமே அவர்க்குடைமைகளாக இருந்தன. பிள்ளைகள் நால்வருக்கும் திருமணங்கள் நடத்தப்பெற்றன. இதற்குள் அவர் ஏராளமான நூல்களை எழுதி வெளியிட்டார். குடும்ப விளக்கு, அழகின்சிரிப்பு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, எதிர்பாராத முத்தம், இருண்டவீடு, இசையமுது. ஏற்றப்பாட்டு, கா த ல் நினைவுகள், காதலா கடமையா, தமிழச்சியின் கத்தி முதலிய பாட்டு நூல்களும், இரணியன், படித்த பெண்கள், சேர தாண்டவம், நல்ல தீர்ப்பு. கழைக் கூத்தியின் காதல், கற்கண்டு, செளமியன், அமைதி என்ற நாடக நூற்களும் வெளிவந்திருந்தன. இறுதியாக இளைஞர் இலக்கியம், தேனருவி, மணிமேகலை வெண்பா, கண்ணகி புரட்சிக் காப்பியம் என்ற நூல்களையும் வெளியிட்டார். இந்திய நாடும், புதுச்சேரியும் விடுதலையடைந்தபின் நாட்டு நிலை மாறியது. வெள்ளையர்களின் கைகளில் இருந்த அரசாட்சி வடநாட்டு இந்திபேசும் மக்களின் கைகளுக்குப் போயிற்று. அதனுல் இந்தியை ஆட்சி மொழியாகக்கொண்டு வர ஆட்சி திட்டமிட்டது. பாரதிதாசனும் அரசியலில் வெகுவாக ஈடுபடலானர். தேர்தலில் கூட்டுக் கட்சிகளின் சார்பில் நின்று 1955-இல் புதுவையில் சட்டமன்ற உறுப்பி னரானர். அதன் பின்னர் 1960-இல் நடந்த தேர்தலிலும் போட்டியிட்டுத் தோற்ருர். அரசியல் ஈடுபாடு இவர்க்கிருந்த மக்கள் ஈடுபாட்டைக் கெடுத்தது. கட்சிகள் விளைத்த பூசல் களால் இவர் பெரிதும் துன்புற்ருர். தம் உடல் நலம் குன்றிய நிலையிலும் நடுவணரசால் தமிழ் நாட்டில் வலிந்து திணிக்கப்பெறும் இந்தியை எதிர்த்து முழக்கமிட்டார். தாம் ஒய்வுக்கால ஊதியமாகப் பிற்கால் பெற்றுவந்த நூறு உருபாக்களையும் பொருட்படுத்தாது அரசினரைத் துணி வுடன் கடிந்தார். தமிழ் மொழிக்கு ஒருபொழுதும் தீங்குவர விடமாட்டேன் என்று களிறெனப் பிளிறின.