பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—- 31 – என்றும், தமிழ் நாட்டின் தலைமையின் தலையில் சம்மட்டி கொண்டு தாக்குகின்ருர், மானமுள்ள தமிழராயின் தமிழ்ப் பற்றில்லாத் தலைமையை வரவிடார்; அல்லது மானமுள்ள தலைமையாயின் தமிழ்நாட்டில் எழுப்பப்பெறும் எதிர்ப்புக் குரலுக்குச் சற்றேனும் செவி குவிப்பார்; இத் த ைக ய இரண்டுங்கெட்டான் நிலையைத் தமிழகப் புலவரும் துணி வுடன் எடுத்தியம்புமாறில்லை என்பதையும் தப்பாமல் குறிக் கின்ருர் பாவலர். "சோற்றுக்கென் ருெருபுலவர் தமிழ்எதிர்ப்பார் அடிவீழ்வார் தொகையாம் செல்வப் பேற்றுக்கென் ருெரு புலவர் சாத்திரமும் தமிழ்என்றே பேசி நிற்பார்!’ 'பாட்டினிலே பெரும்பிழையைப் பல்குவிப் பானுக்கு மணிப் பண்டிதர்கள் சாட்டை கொடுத் தறிக்கை விடத் தாள் ஒன்றும் அற்றதுவோ?” என்று, அவர் கொடுக்கின்ற சாட்டையடி, புலவர்களின் முதுகில் உறைத்தும் காதுகளில் உறைக்குமாறில்லையே 1960-இல் திருச்சி திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர் களால் அமைக்கப்பெற்ற தமிழகப் புலவர் குழுவில், பாரதி தாசனும் ஒருவர். எனினும் புலவர் குழு வு ம் அவர்தம் மொழிக் கருத்துகளுக்கு ஆக்கம் தருவதாக இல்லை. பாவல ருக்கு ஆக்கம் தராமற் போனலும், புலவர் குழுவாவது தமிழாக்கப் பணிகளில் ஈடுபட்டோ, அரசினரைத் தட்டிக் கேட்டோ, பொதுமக்களைக் கிளர்ந்தெழச் செய்தோ, தமிழ்க். கும் தமிழர்க்கும் தமிழ் நாட்டிற்கும் இழைக்கப்பெறும் கொடுமைகளைத் தவிர்க்கவில்லை; கடுமையையாவது குறைக்க எண்ணவில்லை. அக் குழுவிலும் பாவேந்தரின் குரலே தனித்து ஒலித்தது. அப் புலவர்கட்கு முதுகு நரம்புகள் அ று ந் து போகும் பொழுதெல்லாம் பாவேந்தர் அவர் தமக்கு முட்டுக் கொடுத்து அரசினர்க்குக் குரல் கொடுத்தார். -