பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 30 — "அரசிருந்த தமிழன்னை ஆட்சியிலே சூழ்ச்சிசெயும் ஆட்கள் யாரும் எரிசருகு! தமிழரிடை எழுச்சியுறும் தமிழார்வம் கொழுத்த தீ தீ!!” -என்று தீ மூட்டினர், புதுவை தந்த புரட்சிப் பாவலர். தமிழும் தமிழுணர்வும் உள்ளவரை அ வ ரி ன் மாணிக்க மொழிகள் மறையப் போவதில்லை. குதித்துக் கூத்தாடு கின்ற அவரின் பேருள்ளம் தமிழர்க்கு எழுச்சி ஊட்டிக் கொண்டே இருக்கும். நூறு பாவலர்கள் சேர்ந்த புரட்சிக் கழகம் அவர் எதிர்காலத்தில் உருவாக விருக்கும் பல்லா யிரக்கணக்கான தமிழ்ப் பாவலர்களுக்கு வற்ருத பேருணர்வு வெள்ளமாக அவர் பாடல்கள் நின்று உயிர்ப்பூட்டும். தமிழர்க்கேற்பட்ட இத்தகைய மொழி, இன, நாட்டுக் கொடு மைகளுக்கெல்லாம் தமிழ் நாட்டின் தகுதியற்ற தலைமையே பெருங் காரணமாக உள்ளது என்று துணிவாகக் கூறினர். "தமிழ்நாட்டில் தமிழுக் கன்ருே தலைமைதந் திடுதல் வேண்டும்? தமிழ்நாட்டில் தமிழ கான்ருே தலைமைதாங் கிடுதல் வேண்டும்? தமிழ்நாட்டில் பிறமொ ழிக்கே, தலைமைதந் துயிர்வாழ் கின்ருர்! தமிழ்நாட்டில் தலைமை யாவும் தமிழரின் பகைவர் கையில்’-என்றும், "தமிழறியார் தமிழ்ச்செயலில் தலையிடுதல் சரியா? தாம்திருந்தார் பிறர்திருந்தச் சாற்றவரல் தகுமா?" - -என்றும், "தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ் நாட்டில் - முதலமைச்சாய் வருதல் வேண்டும்! . தமிழ்ப்பகைவன் முதலமைச்சாய்த் தமிழ் நாட்டில் வாராது தடுத்தல் வேண்டும்! . . . . . .