பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்பமென் போம் அந்த இந்திதனை -அதன் ஆதிக்கம் தன்னைப் புதைத்திடுவோம்; பங்கம் விளைத்திடில் தாய்மொழிக்கே -உடல் பச்சை ரத்தம் பரி மாறிடுவோம்: சொல்லுக்குச் சொல், நெருப்புப் பொறி! வரிக்கு வரி, கத்தி வீச்சு எரிமலை குமுறியதுபோல, நான்கு புறமும் சிதர்ந் தோடும் கனப்புக் குழம்பு, பாட்டாக உருவெடுத்துப் பாவேந் ரின் மற நெஞ்சத்தை மாற்ருர்க்கு உணர்த்துகின்றது. இம் மற நெஞ்சத்தின் காவலில் தமிழ் இளைஞர்கள் அச்சமற்று நின்றிருந்தனர். அரிமாவின் வேல்விழி நோக்கின பாங்கில் குருளைகள் பகையச்சம் நீங்கி இருப்பதைப் போல் இருந்தது தமிழர் குமுகாயம். தமிழ்ப் புலவர்கள் எனப்படுவோரெல் லாரும் அரசினரின் அச்சுத் தாள்களுக்கு அஞ்சி நடுங்கிய பொழுதெல்லாம், பாவேந்தரின் கடல் முழக்கமே தமிழைக் காத்து வந்தது. பாவேந்தர் எழுச்சியூட்டி வளர்த்த மொழிப் போர் இளைஞர்களின் குருதி நாளங்களில் என்றும் திசை மாருது ஓடிக்கொண்டிருக்கும். 'கடல் போலும் எழுக! கடல் முழக்கம்போல் கழறிடுக தமிழ் வாழ் கென்று கெடல் எங்கே தமிழின் நலம்? அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! செழிப்போரே! இளைஞர்களே! தென்னுட்டுச் சிங்கங்காள்! எழுக, நம் தாய் மொழிப்போரே வேண்டுவது! தொடக்கஞ் செய்வீர்! வெல்வீர், மொழிப்போர் - வெல்க!” என்று வெற்றிச் சங்கம் ஊதினர் பாரதிதாசன். அவர்தம் முழக்கம் எல்லாத் தமிழர் நெஞ்சக் கதவுகளையும் திறந்துள் ளது. மான உணர்ச்சியைக் கீறி இனவுணர்வை வெளிப் படுத்தின. அவர்க்கிருந்த அச்சமெல்லாம் எரிமுன் சருகா யிற்று. . -