பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 28 — “வந்தார்க்கோ நாமடிமை? வந்தார் பொருள் விற்கும் சந்தையா நம்நாடு? தாயாம் தமிழிருக்க இந்தியோ கட்டாயம்? என்ன பெருங்கூத்தோ? கொந்துமொரு கொத்தடிமை நீக்கிடுதல் - ാ! リ2-姦#gi-、5cm7* என்றும், தமிழ் மக்களுக்குக் கடமை சாற்றினர். தமிழர்கள் யாண்டும் விழிப்புணர்வோடிருத்தல் வேண்டும் என்று, அவர் விடுத்த எச்சரிக்கையைத் தமிழர் மறத்தலாகாது. இந்தியைக் கட்டாயமாகத் தமிழர் கற்க வேண்டும் என்பதால் எந்தப் புது நலமும் விளையப்போவது இல்லை என அரசினர்க்குத் திட்ட வட்டமாக அறிவித்தார். "செந்தமிழ் தன்னில் இல்லாத பல சீமைக் கருத்துகள் இந்தியில் உண்டோ ? எந்த நலம் செய்யும் இந்தி? எமக் கின்பம் பயப்பது செந்தமிழன்ருே!” அரசினர் இக்கூற்றுக்குச் செவி கொடாவிடில் தமிழ்மக்கள் வாளாவிரார் என்றும், பெரும் மொழிப் புரட்சி எ ழு ம் என்றும் அவர் முழக்கும் முரசார்ப்பு, தமிழர்க்குப் போர்ச் சங்கம்:அரசினர்க்குச் சாச்சங்கம்: அவர் புவிப்பாய்ச்சல் இது. "இன்னலை ஏற்றிட மாட்டோம்: -கொல்லும் இந்தியப் பொதுமொழி இந்தி என்ருலோ கன்னங் கிழித்திட நேரும் -வந்த கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்". 'அல்லற் கஞ்சோம்; சுடுமொழி சொல்லற் கஞ்சோம்; ஒருசிறை செல்லற் கஞ்சோம்; அஞ்சோம்! தூக்குக் கஞ்சோம்.......... "எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி ? எத்தனைப் பட்டாளம் கூட்டி வரும் ?