உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- டு - பாவலரேறு அவர்கள், பாவேந்தரைப் பற்றித் தம் கைப்படத் தீட்டிய அத்துணை வரைவுகளை மட்டும் ஈங்கண் ஒரு திறப்படுத்தி வகுத்து, நூலாக்கி உங்கள் கைகளில் தந்துள்ளோம்! - பாவேந்தரின் உள்ளுருவைத் துலங்கக் காட்டும் ஒள்ளிய செப்பநூலாடியாக இத் தொகுப்பு இலங்கு கின்றது! பாவேந்தரை இவ்வளவு செப்பமாக உருக் காட்டி உவப்பூட்டும் பிறிதொரு நூல் இதுகாறும் தோன்றவில்லை என்பதை இதனின் அடக்கநிலை வரை காட்டி நிற்கின்றது! பாரதிதாசன், உரைமாலை, பாமாலை, பாட்டரங்க மாலை, நிகழ்ச்சிமாலை என ஐம்பாலாக வகைப்படுத்தப் பெற்று, ஆரெழில் மாலையாக இந்நூல் உருப்பெம் ருெளிர்கின்றது: அரிய தமிழ்க் கருவூலமாகத் திகழ்ந் தொளிரும் பாவலரேறு அவர்களின், பாவிேந்தர் பற்றி எழுந்துள்ள இச்சிறப்புத் தொகுப்புநூல், பாவேந்தரின் பெருமையையும் புகழையும் சிறப்பையும் அவரின் வ்ாழ்க்கைக் கொள்கையையும் வெளிப்படுத்திச் சிறப்ப தோடு, இதனைப் படித்துவக்கும் தமிழரின் உள்ளுணர்வு களிலும் தமிழிய வலிவலைகளைப் பரப்பி ஒளிச்செறிவை உருவாக்கி மிளிரும்! இத்தகு செந்நூலைப் பதிப்பித்துப் புறந்தருவதில் நாங்கள் பெருமையும் உவப்பும் பேரளவில் பெறுகின்ருேம்: - பெற்றுவந்து பொற்புறுங்கள் அன்பும் பணிவும் நிறைந்த, பதிப்புக் குழுவோர்’