உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை இருபதாம் நூற்ருண்டின் இணையற்ற பாவலர் பாரதிதாசன். பாரதியாரை அடியொற்றியதாக இவர் பெயரிருந்தாலும், இவர் பாடல் துறையில் தனியிடம் பெற்றவர்; தலைசிறந்தவர். இவருடைய பாடல்கள் தமிழுக்கே ஒரு மறுமலர்ச்சியை ஊட்டியவை என்ருல் அது மிகையாகாது. ஒரு நல்ல விதை என்பதற்கு அடையாளமே, அதனல் பல நல்ல விதைகள் உருவாகின என்பதுதான்" அந்த வகையில் இவருடைய பாடல்கள் ஒரு பாவலர் படையையே உருவாக்கின. கற்றவர்களேயும் கல்லாதவர் களேயும் கவர்ந்து இழுத்துக் கருத்தில் ஆழ்த்தின இவர் பாடல்கள். சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்குமாக பலநூறு பாடல்களை எழுதியுள்ளார் இவர். இவர் பாடல்கள் எளியன; இனியன; சொல்லழகு நிறைந்தன; கருத்தின்பம் வழங்குவன; புதுமையுணர்வைப் பாய்ச்சு வன: மனப் புரட்சிக்கு வித்திடுவன; ஒர் இ னப் போராட்டத்தைத் தூண்டும் வல்லமை சான்றன. இவரின் இலக்கியச் சிறப்பையும், வாழ்க்கை வறுமை யையும் உற்றுநோக்குவார்க்கு ஓர் உண்மை புலப்படும். தமிழ் இனியது; ஆனல் தமிழர்கள் கொடியவர்கள் இவர்கள் என்றைக்குமே தமிழ்மொழிக்காக உழைக்கும் அறிஞர்களே வாழவிட்டதில்லை. அதனால் தமிழ்ப் புலவர் கள் என்றைக்குமே வளத்துடன் வாழ்ந்ததாக வரலாறு காட்டவில்லை. இதற்கொரு நொண்டிக் காரணமும் சொல்லப் பெறுகிறது. புலவர்கள் வறுமையில் வாழ்ந் தால்தான், அவர்களின் இலக்கிய வெளிப்பாட்டில் மெருகு இருக்கும்; சிறப்பு இருக்கும்; அவர்கள் வள முள்ளவர்களாக வர்ழ்ந்தால், அவர்கள் ஆக்கிப் படைக்கும் இலக்கிய விளைவுகளில் செழிப்பு இராது" என்பது அது. இதில் ஓரளவு உண்மை இருக்கலாம். ஆளுல் இதுவே முழுமையான உண்மையில்லை. கம்பனின் வளமையான இராமாயண ஆக்கத்திற்கு ஒருவகையில் சடையப்ப வள்ளலின் ஆதரிப்பே காரணம் என்று நான் அடிக்கடி நினேப்பதுண்டு, உண்மையான, இயற்கையான புலமைத்திறம் நல்ல பேணுதலும் புரத்திலும் இல்லை யானல் செழித்து வளர்ந்து ஓங்கி நிற்பதில்லை: