உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 39 — கல்லூரியில் கல்லூரி ஆசிரியர்கட்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இப் பயிற்சி விழாவில் கலந்து கொண்ட திரு. பக்தவத்சலம் தமிழில்தான் உரையாற்றினராம். ஆனல் அமிழ்தினுமினிய தமிழ் என்ற சொல்லைச் செருக்குடன் “டமில் டமில்’ என்றே சொன்னராம். இத்துடன் கமிஷனரை' ஆணையாளர் என்று சொல்லுதல் கூடாதென்று கூறியதுடன், அவ்வாறு சொல்வதை நையாண்டியும் செய்தாராம். தமிழ் பற்றி நையாண்டி மேளங் கொட்டும் இந்தத் தருக்கர் அத் தகைய செயலேத் துணிவுடன் செய்யும்படி விட்டது யார்? தமிழர்தானே ! இத்தகையவர்களேத்தாமே பா வேந்தர் பாரதிதாசன் முதலமைச்சர்களாய் வாராது தடுக்கச் சொன் ஞர். அவர் கண்டு சொன்ன இந்த எச்சரிக்கையை நாம் கைக் கொண்டிருந்திருப்போமால்ை இன்று தமிழ் டமில்’ என்று பலுக்கப்பெற்று நம் மா ன த் ைத விலேபோக்கி யிருக்குமா ? எனவே பாரதிதாசன் கூறிய கருத்துகளே வெறும் இசை தழுவிய பாடல்கள் என்றுகருதாமல், அஃது இனித்தோன்றப் போகும் தமிழியக்கத்திற்கு ஊதிய சங்கொலி என்றும், போர்ப்பறையென்றும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன். அச் சங்கொலி தமிழகத் தின் தெருக்கள்தொறும் ஊர்கள்தொறும் இனி முழங்கட்டும். இளைஞர்கள் உள்ள இடமெல்லாம் தமிழியக்கம் தொடங் கட்டும் ; வினை புரியட்டும். அடுத்து வருமாண்டுகளில் இப் படிப்பட்ட முதலமைச்சர்கள் முக்காடிட்டு மூ லை க ளி ல் போய்ப் பதுங்கட்டும். இ த ற் கு த் தமிழர்கள் முன் வருவார்களா ? (சுவடி 4. ஒலை 4. பக் 1-3 (1966) ஆசிரியவுரை 1