பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பாவேந்தர் குடும்ப நலக் கொடை (தமிழன்னைக்கு அளப்பரும் இலக்கியவூட்டத் தையும், தமிழர்களுக்கு அடிப்படையான மொழியின நாட்டுணர்வு ஊட்டத்தையும் ஊட்டிவிட்டுத், தம் குடும்பத்தை வ று ைம யி ல் உழலும்படியாகவே விட்டு விட்டுப் போய்விட்ட பாவேந்தரின் குடும்பத் திற்குத் தந்தம்மாலான பொருளுதவியை வழங்க வேண்டுமென்று தமிழ் நெஞ்சங்கட்கு ஆ சிரியர் நயந்து உரைத்த வேண்டுகோள் அறிக்கை இது வாகும் ! ) செல்வம் மிகுந்த நாடு தமிழ்நாடு, பாண்டியன் அளந்த முத்து, சேரன் நிறுத்த யானை மருப்பு, சோழன் அமைத்த நெற்களஞ்சியம் என்றெல்லாம் இலக்கியம் பாடிய தமிழ்ப் புலவர் வழிவந்த இத் தண்டமிழ்ப் பாவலர்க்கு நாம் கடமை செய்யத் தவறிளுேம். பெண்டிர் நலம் பற்றித் துரது, உலா, மடல், வாயில் என்று பலப்பல காமக் கழிநிலை நூல்களைப் பாடுவதையே தம் தொழிலாகக் கொண்ட இழி நிலைப் பாவலர்கள் போல் அன்றிக் குமுகாயப் புரட்சிக்கே வித்திட்ட இப் புதுமைப் புலவனுக்கு, தமிழ் அன்னேக்குத் தலைமகனுகி அளப்பரிய தொண்டாற்றிய இப் புலவர்மணிக்கு நாம் இதையும் செய்யாமற் போவோமானுல் நமக்கு எதிர் காலத்தே வரும் இழிவைத் தாங்கிக் கொள்ள .ெ ந ஞ் சு போதாது. நாம் செய்து முடிக்கின்ற வினையாற்றலில் நாட்டத்தை வைப்போம். ஆங்காங்கே உள்ள தமிழ்க் கழகங்கள், மன்றங் கள், கல்வியமைப்புகள், புலவர் குழுக்கள், தமிழன்பர்கள் எல்லாரும் தம்தம் சார்பில் தங்களால் இயன்ற அ ள வு பொருள் திரட்டிப் புதுவையில் உழன்றுகொண்டிருக்கும் பாவேந்தர்தம் குடும்பத்திற்கு விடுத்தல் வேண்டும் என்று பல்லாற்ருனும் வேண்டிக் கொள்கின்ருேம். த | ங் க ள் தொகுக்கின்ற பொருளேத் தமிழ்த்திரு. பழநியம்மாள், மேற்