பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 41 — பார்வை: மன்னர் மன்னன், 95, பெருமாள் கோயில் தெரு, புதுவை-1 என்ற முகவரிக்கு விடுத்துவிட்டு, அத் தொகுப்புப் பட்டியலைத் தென்மொழிக்கு வி டு க் க வேண்டுகின்ருேம். பட்டியல் தென்மொழியில் வரும். அனுப்பப் பெறுகையில் இது பாவேந்தருக்குச் செய்யும் நன்றிக்கடன்; தென்மொழி அன்பர்கள் சார்பில் விடுக்கப் பெற்றது, என்றும் குறிப்பிடும் படி கேட்டுக்கொள்கின்ருேம். ஒவ்வொருநாளும் எத்தனையோ துறைகளில் எத்தனையோ உருபாக்களைச் செலவு செய் கின்ருேம். இவ்வழி நாம் அளவில் ஒவ்வொருவரும் குறைந் தது ஒர் உருபா செலவிடுவதால் நம நிலைக்குக் குறைவும் ஏற்பட்டுவிடாது. தென்மொழிச் சார்பில் அன்பர்கள் இதுபோன்ற அறக் கொடைகள் வழங்க வேண்டிக் கொள்வதில் இது மூன்ருவது முறை. பொருளியல் தொல்லே மி கு ந் த இக் காலத்தும், எந்தமிழ் அன்பர்களே இவ்வாறு தூண்டுவது தங்களுக்குள்ள கடமையுணர்வுகளில் தாங்கள் ஒரு சிறு அளவிலாகிலும் ஈடு பாடு கொள்ளுதல் வேண்டும் என்ற அறவுணர்வு பற்றியே. இவ்வேண்டுகோளுக்கு உளமும் உழைப்பும் நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன், இக் கடமைச் சுமையை உங்கள் மீது சுமத்தியமைக்கு நம்மைப் பொறுத்தருளுமாறும் வேண்டிக் கொள்ளுகின்றேன். |சுவடி 5. ஒலை 4.(1967.மே) _பக் 1-7 ஆசிரியவுரை]