பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றிக்கடன் (நம் தலைமுறையில் வாழ் ந் த ஒரு பெரும் பாவேந்தர்க்கு நன்றிக்கடகை நெந்தமிழ் செஞ்சங் களாகிய நாமும், இந்த அரசும் ஆற்றவேண்டிய கடமைகள் என்னென்ன என்பவற்றை மிகவிளக்க மும் விரிவுமாக ஆசிரியர் .ெ ந ஞ் ச அவலத்தோடு கனிவுற வெளிப்படுத்தும் அருமையான ஆசிரிய வுரையிது !) பாரதிதாசன் மறைந்து மூன்ருண்டுகள் ஓடின. தென் மொழி அவர்க்குச் சாத்தும் மூன்ரும் இதழ் மாலே இது. தமிழ் மறந்தறியாத நம் நெஞ்சங்கள் அவரையும் மறப்ப தில்லை. தமிழை நினைக்குந்தோறும் அவரையும் நினைக் கின்ருேம். அவர் பாடல்கள், அவர் துணிவு, அ வ ர் த ம் வீருர்ந்த போக்கு எல்லாம் நம் கண்முன் நின்று ஒளிவட்ட மிடுகின்றன. அவர் மறந்து போகாத ஒர் உயிர். தமிழ் மறவாத உயிரைத் தமிழரும் மறப்பதில்லை. கள்ளங் கவடற்ற அவர் இலக்கிய நெஞ்சினுல் செரிக்க முடியாதாதிக்குத் திசை காணமுடியாத அரசியல் சூழல் இன்னும் பல இலக்கியங்கள் அவரிடமிருந்து வெளிவர முடியாமல் த டு த் து விட்டது. இறுதியில் பொருள் முட்டுப்பாட்டால், இருந்த மு த லே த் திரைப்படத்துக்குக் கொட்டித் தம் குடும்பத்தைத் தாமே தூக்கி நிறுத்தவும், தம் அகக் கற்பனையைப் புறக்காட்சியாகக் கண்டு களிக்கவும் அவர் செய்த முயற்சி அவரை வாழ்வின் இறுதிப் படிக்கட்டிற்கே கொண்டு நிறுத்தியது. நன்றி கெட்ட தமிழகம் இது. நன்றி மறந்த தமிழர் நாம். உயிருள்ள பொழுது அவரின் உருவத்தையும் காண மறுத்த நாம், அவர் மறைந்த இஞ்ஞான்றை விழா வெடுக் கின்ருேம்; படிமம் செய்யத் திட்டமிடுகின்ருேம்; அவருடைய சிறுசிறு அசைவுகளைப் பற்றியும் அறிந்து கொள்ள விரும்பி நிற்கின்ருேம். தமிழர்தம் நல்லுணர்வை மண்ணில் புதைந்து போகாமல் தூக்கி நிறுத்திய அப் பாவலனுக்கு நாம் காட்டிய